மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரிப்பு - வலுக்கும் கண்டனங்கள்

Manipur Violence Updates: மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி ஒருவர் உயிரோடு வீட்டில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Sudharsan G | Last Updated : Jul 24, 2023, 02:55 PM IST
  • மே 3ஆம் தேதி முதல் மணிப்பூரில் வன்முறை அங்கு நடக்கிறது.
  • கடந்த மே 28ஆம் தேதி 80 வயது மூதாட்டி உயிரோடு கொளுத்தப்பட்டது தெரியவந்தது.
  • அவரின் கணவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி ஆவார்.
மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரிப்பு - வலுக்கும் கண்டனங்கள் title=

Manipur Violence Updates: மணிப்பூரில் இரு சமூக மக்களிடயே தொடரும் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த மே மாதம் முதல் அங்கு அசாதாரண சூழல் தான் நிலவி வருகிறது. பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் இரண்டு பெண்கள் நிர்வாணமாக வேறு சமூக ஆண்களால் அழைத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. அதில் 20 வயது பெண் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் குறித்து முக்கிய குற்றவாளிகள் கைதான நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதுபோன்ற சூழலில் தான், கடந்த மே 28ஆம் தேதி 80 வயது மூதாட்டி உயிரோடு கொளுத்தப்பட்டது தற்போது தெரியவந்ததுள்ளது. காக்சின் மாவட்டத்தை சேர்ந்த Sorokhaibam Ibetombi என்ற அந்த மூதாட்டி தனியாக வீட்டில் வசிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று, அவர் வன்முறையாளர்கள் கிராமத்திற்குள் நுழைந்ததை அறிந்ததும், தப்பி ஓட முடியாததால் வீட்டை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க |  மணிப்பூர் நிர்வாண சம்பவத்தன்று மற்றொரு கொடூரம்... 2 இளம்பெண்களை சிதைத்த வன்முறையாளர்கள்

அப்போது பயங்கர ஆயுதங்களுடன் மூதாட்டியின் வீட்டுக்கு வந்த வன்முறையாளர்கள், வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த குற்ற சம்பவம் குறித்து Serou(சீரோ) காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

சொரொகைபம் இபேதொம்பி-யின் (Sorokhaibam Ibetombi) கணவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி சுராசந்த் சிங் (Churachand Singh) என்பது தெரியவந்துள்ளது. அவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் கையால் விருது பெற்றுள்ளார். நாட்டுக்காக போராடிய ஒருவரின் மனைவிக்கு இப்படி நேர்ந்திருப்பது நாட்டுக்கே தலைகுனிவு என காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. 

மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. கடந்த வாரம் பிரதமர் மோடியும் மணிப்பூர் வன்முறை குறித்து பேசி இருந்த நிலையில், தற்போது மணிப்பூரில் நடந்த பல குற்றசம்பவங்கள் குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மே 3ஆம் தேதி அன்று வன்முறை வெடித்ததில் இருந்து மணிப்பூரில் இருந்து குறைந்தது 125 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.  மியான்மர் நாட்டு எல்லையில் உள்ள மணிப்பூர், குகி பழங்குடியினர் குழுவானது பழங்குடியினரல்லாத குழுவான, பெரும்பான்மை இனத்தவரான இருக்கும் மெய்டீஸ் உடன், பழங்குடியினருக்கு வழங்கப்படும் பொருளாதார நன்மைகள் மற்றும் இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் உள்ளது.

சுரமா 12 லட்சம் மக்கள் வசிக்கும் மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான துணை ராணுவம் மற்றும் ராணுவத் துருப்புக்களை மத்திய அரசு விரைந்த பிறகு பிரச்சனை தணிந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆங்காங்கே வன்முறை மற்றும் கொலைகள் விரைவில் மீண்டும் தொடங்கி மாநிலம் பதற்ற நிலையிலேயே உள்ளது.

மேலும் படிக்க | Manipur Video: அரசு ஒன்றும் செய்யவில்லை... மனவேதனையை பகிர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News