குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் தூண்டவில்லை என்றால், ஏன் இந்த போராட்டங்களை காங்கிரஸ் கண்டிக்கவில்லை என ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்!
குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த வன்முறையை காங்கிரஸ் கண்டிக்காதது, போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் இருப்பதைக் குறிக்கிறது என்று பாஜக தேசிய செயற்பாட்டுத் தலைவர் ஜே.பி.நட்டா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "வன்முறைக்கு பின்னால் தாங்கள் இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறது, போராட்டங்களுக்கு பின்னால் அவர்களை இல்லை என்றால், போராட்டங்களை ஏன் அவர்கள் கண்டிக்கவில்லை?. இவ்வளவு நாட்கள் கடந்துவிட்டன, இன்னும் அவர்கள் அமைதி காப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Jagat Prakash Nadda, BJP in Vadodara, Gujarat on #CitizenshipAmendmentAct: Congress says they are not behind the violence. If you are not behind it, then so many days have passed, why have you not condemned it? (2.1.20) pic.twitter.com/xBoi0CHB25
— ANI (@ANI) January 2, 2020
தனது உரைக்கு முந்தைய நாள் நடா வதோதராவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் பிரார்த்தனை செய்தார். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தலைவருக்கு கோவில் நிர்வாகிகள் அளித்த கடிதத்தினையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இதனிடையே. கூட்டங்களை நடத்துவது, கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வது என திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தனது பிரச்சாரங்களை மக்களின் மத்தியில் கொண்டு செல்கிறது. மேலும் மக்களின் ஆதரவைப் பெற பாரதிய ஜனதா வியாழக்கிழமை கட்டணமில்லா எண்ணை அறிமுகப்படுத்தியது.
2014 டிசம்பர் 31-ஆம் தேதி வரை மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர், எனினும் தங்களது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கும் முடிவு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான பொய் போராட்டக்காரர்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டி வருகிறது.
என்றபோதிலும், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்களும், இந்த சட்டமானது "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என கூறி இதற்கு தங்கள் மாநிலத்தில் அனுமதி இல்லை என தெரிவித்து வருகின்றனர்...