இது நடந்தால்.. அசதுத்தீன் ஒவைசி உ.பி.யின் அடுத்த முதல்வராக முடியும்

"ஏழைகள் மற்றும் தலித்துகள் அதிகாரத்தில் பங்கைப் பெறுவதை நான் உறுதி செய்வேன். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் பதவி மற்றும் அதிகாரங்களை வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை -சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 3, 2021, 02:43 PM IST
இது நடந்தால்.. அசதுத்தீன் ஒவைசி உ.பி.யின் அடுத்த முதல்வராக முடியும் title=

லக்னோ: அசாதுதீன் ஒவைசி உத்தரபிரதேசத்தின் வாக்காளராக மாறினால், அவரும் மாநில முதல்வராக முடியும் என்று சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறினார். பாஜக கூட்டணியில் முன்பு அங்கம் வகித்த சுஹெல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவரும், பகுசன் சமாச் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ராஜ்பர், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ராஸ்ராவில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ​​அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி (Asaduddin Owaisi) உத்தரபிரதேசத்தில் வாக்களிக்கும் உரிமையை பெற்றால், அவரும் உ.பி. மாநிலத்தின் முதல்வராக முடியும் எனக் கூறியுள்ளார்.

முஸ்லிமாக இருப்பது குற்றமா?
"உத்தரபிரதேச மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் இஸ்லாமிய (Uttar Pradesh Muslims) மக்கள் ஆவார்கள். அவர்களுக்கு அரசியலில் பங்கு இருக்கிறது. அவர்களுக்கும் அதிகாரத்தில் ஒரு பங்கு இருக்க வேண்டும். அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் முஸ்லிம்களுக்கும் இங்கு பங்கு இருக்கிறதா? உரிமை இருக்கிறதா? எனக்கேள்வி எழுப்பினார், "ஒரு முஸ்லீமின் மகன் ஏன் முதல்வராகவும், துணை முதல்வராகவும் இருக்கக்கூடாது? அவர்கள் முஸ்லிமாக இருப்பது குற்றமா? அப்படி பார்த்தால் பிரிவினைவாதம் மற்றும் பாகிஸ்தான் பற்றி எப்போதும் பேசும் மெஹபூபா முப்தியுடன் (Mehbooba Mufti) கூட்டணி அமைத்து ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சியில் பங்கேற்றது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

ALSO READ | Apologize PM Modi என்ற கோஷத்தை முன்னெடுக்கும் ஓவைசி

ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய முதலமைச்சர்:
2022 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பத்து கட்சிகள் ஒன்றாக இணைத்து "பாகிதரி சங்கல்ப் மோர்ச்சா" (Bhagidari Sankalp Morcha) என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணி உ.பி. மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய முதலமைச்சர் பதவியில் அமருவார். அவர்கள் வெவ்வேறு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று சமீபத்தில் ராஜ்பர் கூறியதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையுடன் "பாகிதரி சங்கல்ப் மோர்ச்சா" கூட்டணி வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"ஏழைகள் மற்றும் தலித்துகள் அதிகாரத்தில் பங்கைப் பெறுவதை நான் உறுதி செய்வேன். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் பதவி மற்றும் அதிகாரங்களை வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

பாபாசாகேப் அம்பேத்கருக்குப் (Babasaheb Ambedka) பிறகு, அமைச்சரவை மந்திரி பதவியை ராஜினாமா செய்த இரண்டாவது நபர் நான் என்று கூறிய அவர், சிலர் எம்.எல்.ஏ, எம்.பி. மற்றும் அமைச்சர் ஆவதற்கு தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆனால் நான் ஆட்சியில் இருந்தபோதும் ஏழைகளின் உரிமைகளுக்காக முதலமைச்சருடன் தொடர்ந்து போராடினேன் என்றார்.

ALSO READ | உத்தராகண்ட் மாநில அரசியலில் நெருக்கடி -முதல்வர் தீரத் சிங் பதவி விலகினார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News