CBSE Exam: சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு பொதுத்தேர்வு.. முக்கிய தகவல் வெளியீடு, உடனே படிக்கவும்

CBSE Practical Exam 2024 :10 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரியம் என்ன தெரிவித்துள்ளது என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 17, 2024, 03:21 PM IST
  • சிபிஎஸ்இ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இவற்றை பள்ளி முதல்வர்கள் கவனித்தில் கொள்ள வேண்டும்.
  • மதிப்பெண்களைப் பதிவேற்றிய பிறகு திருத்தம் அனுமதிக்கப்படாது.
CBSE Exam: சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு பொதுத்தேர்வு.. முக்கிய தகவல் வெளியீடு, உடனே படிக்கவும் title=

CBSE Practical Exam 2024 Guidelines : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனைத்துப் பள்ளிகளுக்கும் செய்முறைத் தேர்வுகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பள்ளி முதல்வர்களிடம் கூறப்பட்டுள்ளது. இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த ஜனவரி 1ஆம் தேதி தொடங்கியுள்ளன. இந்த தேர்வுகள் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று முடிவடைகிறது. மேலும் இந்த செய்முறைத் தேர்வுகளின் சரியான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு பள்ளிகளை வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் சந்திக்க நேரிடாது. இதன் மூலம் மாணவர்களின் முடிவுகள் துல்லியமாக வெளியிடப்படுகிறதா இல்லையா என்பதை உறுதி செய்வது பள்ளிகளின் பொறுப்பாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதிப்பெண்களைப் பதிவேற்றிய பிறகு திருத்தம் அனுமதிக்கப்படாது:
அந்த அறிவிப்பில், சிபிஎஸ்இ கூறியதாவது, “10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகளின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் போது, ​​பள்ளி முதல்வர், உள் தேர்வாளர் மற்றும் வெளித் தேர்வாளர் சரியான மதிப்பெண்கள் போர்ட்டலில் பதிவேற்றப்படுவதை உறுதி செய்வார்கள். ஏனெனில் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டப் பிறகு அதில் எந்த திருத்தமும் செய்ய அனுமதிக்கப்படாது.

மேலும் படிக்க | CBSE 10 & 12வது பொதுத்தேர்வு பிப்ரவரி 15, 2024 முதல்! டைம் டேபிள் விரைவில்

இவற்றை பள்ளி முதல்வர்கள் கவனித்தில் கொள்ள வேண்டும்:
செய்முறைத் தேர்வுகளை நடத்தும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளி முதல்வர்களுக்கு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. பணியைத் தொடங்குவதற்கு முன், உள் தேர்வாளர் மற்றும் வெளிப்புற ஆய்வாளர் வாரியத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் படிக்க வேண்டும். இந்த வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். ஆவணங்களிலிருந்து மதிப்பெண்களைப் பிரித்து விவரங்களைச் சரிபார்ப்பது பாடத்திட்டத்தின் பொறுப்பாகும். இது தவிர, போர்ட்டலில் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்வதற்கு முன், உள் மற்றும் வெளி தேர்வாளர்கள் சரியான மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்களா இல்லையா என்பதை அந்த அந்த பள்ளி முதல்வர்கள் சரிபார்க்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கூடுதல் தகவலுக்கு சிபிஎஸ்இ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை:
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. அதன்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2024 பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரையும், 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற முக்கிய பாடங்களுக்கிடையே போதிய நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளைக் காண இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.  
12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளைக் காண இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | Ram temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு நன்கொடை கிடைத்துள்ளது?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News