Income Tax: புத்தாண்டில் ஒரு மாஸ் செய்தி, இந்த வருவாய்க்கு வரி செலுத்த வேண்டாம், தெரியுமா?

Income Tax Slab: இந்த புத்தாண்டில் சாமானியர்கள் சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவற்றில் சில மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அமையவுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 31, 2022, 03:58 PM IST
  • நாட்டில் வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும்.
  • மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தை வைத்து வேலைவாய்ப்பு திட்டங்கள் உட்பட பல நலத்திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.
  • மேலும், பல்வேறு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளையும் அரசே ஏற்கிறது.
Income Tax: புத்தாண்டில் ஒரு மாஸ் செய்தி, இந்த வருவாய்க்கு வரி செலுத்த வேண்டாம், தெரியுமா? title=

வருமான வரி ஸ்லேப்: 2022 ஆம் ஆண்டு முடிவடைந்து 2023 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது.  புத்தாண்டு மக்களுக்கு புதிய நம்பிக்கைகள் நிறைந்ததாக அமையும். அதே நேரத்தில், இந்த ஆண்டு மக்கள் தங்கள் வாழ்க்கையில் பல புதிய விஷயங்களையும் செய்வார்கள். இந்த ஆண்டு மக்கள் தங்கள் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் பல வேலைகளைச் செய்ய உள்ளனர். இந்த புத்தாண்டில் சாமானியர்கள் சில முக்கியமான விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவற்றில் சில மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அமையவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம். 

வருமான வரி

நாட்டில் வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். இந்த நோக்கத்தில் அரசு மூலம் வருமானத்திற்கு வரி வசூலிக்கப்படுகிறது. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தை வைத்து வேலைவாய்ப்பு திட்டங்கள் உட்பட பல நலத்திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. மேலும், பல்வேறு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளையும் அரசே ஏற்கிறது.

வருமான வரி அடுக்கு (இன்கம் டாக்ஸ் ஸ்லாப்)

வருமானம், வரி அடுக்கின் படி வரிக்கு உட்பட்டு இருக்கும் நாட்டின் அனைத்து குடிமகன்களும் வருமான வரி செலுத்த வேண்டியது அவசியமாகும். சிலருக்கு இதில் சலுகையும் கிடைக்கிறது. வருமான வரி ஸ்லாப்பின்படி ஒருவருக்கு வருமானம் இல்லை என்றால், அவர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. 

மேலும் படிக்க | Budget 2023: பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிதி அமைச்சர் அளிக்கவுள்ள நல்ல செய்தி 

2021-22 நிதியாண்டின் படி, புதிய வரி முறையின்படி வருமான வரி செலுத்த வேண்டும் என்றால், 2.5 லட்சம் ஆண்டு வருமானத்திற்கு வருமான வரி விதிக்கப்படாது. 

வருமான வரி அடுக்கு விகிதம்

மறுபுறம், 60 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் HUF 2021-22 நிதியாண்டில் பழைய வரி முறை மூலம் வரி செலுத்தினால், அவர்களும் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், பழைய வரி முறையின் கீழ் வரி செலுத்தும் 60 வயதுக்கு மேல் மற்றும் 80 வயதுக்கு குறைவான மூத்த குடிமக்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை. மறுபுறம், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

மேலும் படிக்க | Income Tax Slab: இந்த வருமானத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும், உங்கள் வருமாத்திற்கு வரி எவ்வளவு? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News