ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் பெண் ரோபோ ‘வயோமித்ரா’!

வெற்றிகரமான சந்திரயான் -3 பயணத்தைத் தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 27, 2023, 02:32 PM IST
  • விண்வெளிப் பயணத்தின் முதல் சோதனை அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முதல் சூரியப் பயணமான 'ஆதித்யா எல்-1' ஐ ஏவுவதற்கு இஸ்ரோ விடாமுயற்சியுடன் தயாராகி வருகிறது.
  • கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ககன்யான் திட்டம்.
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் பெண் ரோபோ ‘வயோமித்ரா’! title=

வெற்றிகரமான சந்திரயான் -3 பயணத்தைத் தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். பூமியில் இருந்து, 400 கி.மீ தொலைவில் மூன்று நாட்கள் விண்வெளியில் இவர்கள் ஆய்வு செய்வர். பின்னர் மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்படுவர். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த திட்டம், இப்போது ஒரு முக்கியமான கட்டத்தில் நுழைய உள்ளது என்று இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளிப்படுத்தினார்.

ககன்யான் பணியில் 'வியோமித்ரா' என்ற பெண் ரோபோவை சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக ஜிதேந்திர சிங் அறிவித்தார். இந்த விண்வெளிப் பயணத்தின் முதல் சோதனை அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பயணங்களில், 'வியோமித்ரா' என்ற பெண் ரோபோ விண்வெளியில் பயணித்து, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகளில் இந்தியாவின் முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ஒரு மனிதனை விண்வெளிக்கு அனுப்பி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்ப அழைத்து வரும் லட்சிய முயற்சியாகும். LVM3 – HLVM3 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ககன்யான் திட்டத்தின் முதன்மை நோக்கம் மனித விண்வெளிப் பயணத்திற்கான இந்தியாவின் திறனை நிரூபிப்பதாகும். மூன்று நாள் பணிக்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரை பூமியின் மேற்பரப்பில் இருந்து 400 கிமீ உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் அனுப்புவதும், அதைத் தொடர்ந்து பாதுகாப்பாக திரும்பி வந்து இந்திய கடல் பரப்பில் இறங்குவதும் இதில் அடங்கும்.

ககன்யான் திட்டம் குறித்து கூறிய இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘ தொற்றுநோய் காரணமாக ககன்யான் திட்டம் தாமதமானது. இப்போது நாங்கள் அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் முதல் சோதனைப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளோம். விண்வெளி வீரர்களை அனுப்புவதைப் போல அவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் முக்கியம்’ என்று கூறினார்.

மேலும், “இரண்டாவது சோதனையில், யோமித்ரா பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ரோபோ மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் இருக்கும். இந்த திட்டம் வெற்றிகாரமாக நடந்தால், நாம் இந்த துறையில் அனைவரையும் தாண்டி முன்னோக்கி செல்லலாம்.” என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் படிக்க | சந்திரயான்-3: நிலவின் தடம் பதிக்கும் முன்... விக்ரம் லேண்டர் அனுப்பிய நிலவின் வீடியோ

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் இந்தப் பயணம் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து மனித விண்வெளிப் பயணத்தைத் தொடங்கும் திறன் கொண்ட உலகின் நான்காவது நாடாக இந்தியா விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ககன்யான் பணிக்கு இணையாக, நமது சூரிய குடும்பத்தின் நட்சத்திரத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் முதல் சூரியப் பயணமான 'ஆதித்யா எல்-1' ஐ ஏவுவதற்கு இஸ்ரோ விடாமுயற்சியுடன் தயாராகி வருகிறது. இன்-சிட்டு உபகரணங்களுடன் பொருத்தப்பட்ட இந்த பணியானது, எரிப்பு, கரோனா மற்றும் மின்காந்த அலைகள் உள்ளிட்ட சூரியனின் நிகழ்வுகளை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விண்கலம் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 120 நாள் பயணத்தை அதன் நோக்கம் கொண்ட இடத்திற்கு - சூரியனின் லாங்ரேஜ் புள்ளிக்கு தொடங்குகிறது.

மேலும் படிக்க | சந்திரயான் 3 விண்கலத்தை வைத்து காண்டம் விளம்பரம்..! அதிர்ச்சியில் மக்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News