918 KG கிச்சடி செய்து இந்தியா கின்னஸ் சாதனை

Last Updated : Nov 5, 2017, 09:12 AM IST
918 KG கிச்சடி செய்து இந்தியா கின்னஸ் சாதனை title=

டெல்லியில் நேற்று முதல் 'உலக உணவு இந்தியா 2017' என்ற கருத்தரங்கம் மத்திய உணவுத் துறை அமைச்சகமும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து நடத்துகின்றது. 

இந்தியாவின் புகழ்பெற்ற சமையல் வல்லுனர்களில் ஒருவரான சஞ்சீவ் கபூர் தலைமையில் அமைந்த குழு ஒன்று டில்லியில் 918 கிலோ கிச்சடி செய்தனர். இந்த சாதனையை கின்னஸ் சாதனைப் புத்தக ஆய்வாளர்கள் நேரில் கண்டு இதை சாதனையாக அங்கீகரித்து உள்ளனர். இந்த சாதனையை யோகா குரு பாபா ராம்தேவ் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். இந்த கிச்சடி அக்ஷய பாத்திர ஃபவுண்டேஷன் மற்றும் குருத்வாராவுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு 60000 மக்களுக்கு அளிக்கப்பட்டது.

Trending News