2023-24ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும்: உலக வங்கி

World Bank About Indian Economy Growth: 2024 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 3, 2024, 03:17 PM IST
  • தெற்காசிய பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கை.
  • சேவை மற்றும் தொழில்துறையில் வளர்ச்சி வலுவாக இருக்கும்.
  • நடப்பு நிதியாண்டிற்கான முதல் நிதிக் கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியிடவுள்ளது.
2023-24ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும்: உலக வங்கி title=

World Bank About Indian Economy Growth: இந்தியாவின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ள உலக வங்கி, நாட்டின் ஜிடிபி வளர்ச்சி (GDP) புல்லட் வேகத்தில் இருக்கும் என்று கூறியுள்ளது. 2024ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக, உலக வங்கி இந்த காலகட்டத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 1.2 சதவீதம் குறைவாக மதிப்பிட்ட நிலையில், இப்போது அது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மதிப்பீட்டை 7.5 சதவீதமாக மாற்றியுள்ளது.

உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியம்

2025 ஆம் ஆண்டில் 6.1 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் தெற்காசியா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக இருக்கும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலக வங்கி செவ்வாயன்று தெற்காசிய பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், தெற்காசியாவின் வளர்ச்சி விகிதம் 2024 ஆம் ஆண்டில் 6.0 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இந்தியாவில் ஏற்பட உள்ள வலுவான வளர்ச்சி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் நிலை உள்ளது தான் என தெரிவித்தது. எனினும், 2025ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

தெற்காசிய பொருளாதார வளர்ச்சி

2024-25 ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் பொருளாதாரம் 5.7 சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது அதே நேரத்தில் பாகிஸ்தானின் பொருளாதாரம் 2.3 சதவிகிதம் என்ற அளவிலும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவிகிதம் என்ற அளவிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | நாளையிலிருந்து ட்ரக் உதயநிதி என்று அழைப்போம்: பாஜக தலைவர் அண்ணாமலை

வளர்ச்சியை சந்திக்கும் துறைகள்

உலக வங்கி அறிக்கையின்படி, தெற்காசியாவின் வளர்ச்சி விகிதம் 2024ல் 6 சதவீதமாக இருக்கும். 2024ஆம் நிதியாண்டுக்கும் 2025ஆம் நிதியாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக் குறைவிற்கு, கடந்த ஆண்டு முதலீட்டில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாகும் என்று உலக வங்கி கூறியது. மேலும் சேவை மற்றும் தொழில்துறையில் வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் துறையிலும் அதிக வளர்ச்சி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

பணவீக்கம்

தொடர்ச்சியான கட்டமைப்பு சவால்கள் வளர்ச்சியை பாதிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ள உலக வங்கி, இதனால் சம்பந்தப்பட்ட துறைகளின் செயல்திறன் குறையும் என்றும் கூறியுள்ளது. எனினும், பணவீக்கம் குறையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நிதிப் பற்றாக்குறை மற்றும் அரசு கடன் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மத்திய அரசின் வலுவான உற்பத்தி வளர்ச்சியால் சாத்தியமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் பொருளாதார நிதிக் கொளை குழு கூட்டம்

நடப்பு நிதியாண்டிற்கான முதல் நிதிக் கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிடிபி வளர்ச்சி மற்றும் சில்லறை பணவீக்கம் குறித்த மதிப்பீடுகளை ரிசர்வ் வங்கி அளிக்கும். 2024 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.4% என்ற விகிதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், 2024 நிதியாண்டில் 7.6% என்ற விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | பாஜக ஆட்சியின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும் - திருச்சி சிவா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News