கனமழை தொடரும்! மும்பையை எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

Last Updated : Jul 8, 2018, 03:30 PM IST
கனமழை தொடரும்! மும்பையை எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்! title=

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

மும்பையில் தொடரும் கனமழை காரணமாக புறநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பலத்த மழை பெய்து வருவதால் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை நகரின் தாழ்வான பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மும்பையில் உள்ள சியான் காவல்நிலையம் அமைந்துள்ள பகுதி முற்றிலும் வெள்ளத்தில் மிதக்கிறது.

மான்குர்ட் பகுதியில் ஒருவர் மின்னல் தாக்கி பலியானதாகவும், சுற்றுலா சென்ற 5 பேரைக் காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் மும்பை ராய்காட், தானே மற்றும் பல்ஹார் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த கனமழையானது மேலும் 5 நாட்கள் தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Trending News