Budget 2024: சீனியர் சிட்டிசன்களின் ஆசை நிறைவேறுமா? மீண்டும் 50% வரை தள்ளுபடி கிடைக்குமா?

Railway Budget 2024 Updates: ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகையை மீண்டும் பெற நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறது. அதன்படி இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ரயில் சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 1, 2024, 11:07 AM IST
  • சீனியர் சிட்டிசன்கள் வேறு என்னென்ன என்ன எதிர்பார்க்கலாம்?
  • மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை.
  • இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்.
Budget 2024: சீனியர் சிட்டிசன்களின் ஆசை நிறைவேறுமா? மீண்டும் 50% வரை தள்ளுபடி கிடைக்குமா? title=

ரயில்வே பட்ஜெட் 2024 அப்டேட்: பிப்ரவரி 1, 2024 அதாவது இன்று காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (FM Nirmala Sitharaman) பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகிறார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். மேலும் மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதுமட்டுமின்றி தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்தவகையில் இன்று தாககல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் மூத்த குடிமக்களும் பட்ஜெட்டில் பல எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். முக்கிய ரயில்வே சலுகை தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம். எனவே, ரயில்களில் வழங்கப்படும் தள்ளுபடி மீண்டும் அமலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டு வருகின்றது.

ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகையை மீண்டும் பெற காத்திருக்கிறது. கொரோனா தோற்றுக்கு முன்னதாக, மூத்த குடிமக்கள் சலுகை உட்பட பல வகையான சலுகைகளை ரயில்வே வழங்கி வந்தது, ஆனால் கொரோனா பரவலுக்கு பிறகு ரயில்வே அனைத்து வகையான சலுகைகளும் நிறுத்தியது. தற்போது நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே சலுகை வழங்கப்படுகிறது. எனவே இந்த பட்ஜெட்டில், கட்டண சலுகையை அரசு பரிசாக அளிக்கலாம் என மூத்த குடிமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Budget 2024: கடந்த பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன தெரியுமா?

அதன்படி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 59,837 கோடி ரூபாய் மானியமாக ரயில்வே வழங்குகிறது என்றும் இது ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் சராசரியாக 53 சதவீத சலுகையாகும் என்றும் கூறியிருந்தார். இருப்பினும் இப்போது பட்ஜெட்டில் மீண்டும் இந்த சிறப்பு தள்ளுபடி கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் நம்புகின்றனர்.

சீனியர் சிட்டிசன்கள் வேறு என்னென்ன என்ன எதிர்பார்க்கலாம்?
பழைய வரி முறையின் கீழ், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ரூ. 3,00,000 வரையிலான வருமானத்திற்கு வரியிலிருந்து விலக்கு பெறலாம்.

முதியோருக்காக (Senior Citizen) பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வரவிருக்கும் பட்ஜெட்டில் மேலும் உள்ளடக்கிய நடவடிக்கைகளை அரசாங்கத்திடம் கோரியுள்ளன. 

யூனியன் பட்ஜெட்டை நேரலையில் எங்கு பார்ப்பது?
யூனியன் பட்ஜெட்டை நீங்கள் நேரலையில் பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சேனல்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் இதைக் காணலாம்.

- தூர்தர்ஷன்
- சன்சத் தொலைக்காட்சி
- நிதி அமைச்சகத்தின் YouTube சேனல்
- பல்வேறு செய்தி சேனல்கள்.

மேலும் படிக்க | Budget 2024: இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் சலுகைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News