இஸ்ரோவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது!!

Updated: May 19, 2017, 11:26 AM IST
இஸ்ரோவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது!!
Image credit: ISRO

2014-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது, இஸ்ரோ நேற்று வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்விருதை வழங்க, இஸ்ரோ சார்பில் அதன் தலைவர் கிரண் குமார் பெற்றுக் கொண்டார்.

நினைவுப் பரிசு, ரூ.1 கோடி பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்ட இவ்விரு துக்கு, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலான தேர்வுக்குழு இஸ்ரோவை தேர்வு செய்தது.

2015-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதை, அகதிகள் மறுவாழ்வு ஐ.நா. ஆணையருக்கு மன்மோகன் கடந்த ஆண்டு வழங்கினார்.

இதற்கு முன் இந்த விருதை முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், நமீபியா தலைவர் சாம் நுஜோமா, கென்ய சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் வாங்கரி மத்தாய், ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.