ஜம்மு பேருந்து விபத்து: 22 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்தனர்.

ANI | Updated: Nov 14, 2017, 06:15 PM IST
ஜம்மு பேருந்து விபத்து: 22 பேர் காயம்!

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரின் ராம்நகரில் பேருந்து ஒன்று ஜந்த்ரெர் பகுதியில் கவிந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சுமார் 22 பேர் காயமடைந்தனர். 

சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதிப்பட்டவர்களை அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.