பாஜக நடத்திய ரூ. 100 கோடி பேரம்... வீடியோ வெளியிட்ட கேசிஆர் - ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்!

தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களிடம் ரூ. 100 கோடி அளவில் பாஜகவின் பேரம் பேசியதாக கூறி வீடியோ ஒன்றையும் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 4, 2022, 11:12 AM IST
  • இதுதொடர்பாக மூன்று பேர் கைது.
  • ஒரு மணிநேரத்திற்கு மேலான பேரம் பேசும் வீடியோ இருப்பதாக தகவல்.
  • பாஜகவினர் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
பாஜக நடத்திய ரூ. 100 கோடி பேரம்... வீடியோ வெளியிட்ட கேசிஆர் - ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்!  title=

தெலங்கானா மாநிலத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் (டிஆர்எஸ்)  நான்கு எம்எல்ஏக்களை பாஜக பேரம் பேசும் வீடியோவை அம்மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த தன்னிடம், பாஜகவினர் பேரம் பேசும் சுமார் ஒருமணிநேரம் கொண்ட வீடியோ உள்ளதாக தெரிவித்தார். மேலும், அதன் 5 நிமிட காட்சியை மட்டும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். 

டிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பண்ணை வீடு ஒன்றில் சந்தித்த இடைத்தரகர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பெயரை 20 முறையும், பிரதமர் மோடியின் பெயரை 3 முறையும் குறிப்பிட்டதாக ராஜசேகர் ராவ் கூறினார். தொடர்ந்து, கர்நாடக அரசு மாற்றம் குறித்தும் அதில் பேசியதாக அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து, 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைதுசெய்தனர். இருப்பினும், இதில், பாஜகவுக்கு அல்லது பாஜக தலைவர்கள் யாருக்கும் தொடர்பு இருப்பதாக இன்னும் நிரூப்பிக்கப்படவில்லை. 

மேலும் படிக்க | பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப் படாதது ஏன்... மத்திய அமைச்சர் கூறுவது என்ன!

இந்த வீடியோக்களை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், உயர் நீதிமன்றம், எதிர்கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு இந்த வீடியோவை அனுப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்' என நீதித்துறையிடம் அவர் கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும், தெலங்கானா மட்டுமின்றி, ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தானிலும் இதே முறையைதான் பாஜக பின்பற்றுகிறது எனவும் குற்றஞ்சாட்டினார். 

இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், டிஆர்எஸ் கட்சியினர், நடிகர்களை கொண்டு அந்த வீடியோவை தயாரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறுகையில்,"முதலமைச்சரின் இந்த செயலானது, பண்ணை வீட்டு குடும்பத்தின் (முதலமைச்சர் குடும்பம்) பயத்தைதான் காட்டுகிறது" என பதிலடி கொடுத்தார். 

கடந்த இரண்டு நாள்களுக்கு முன் நடந்த பேரணியில், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்,"டிஆர்எஸ் எம்எல்ஏக்களின் சுயமரியாதையை சோதித்து பார்க்க டெல்லியில் இருந்து சில இடைத்தரகர்கள் வந்துள்ளனர். அவர்கள் நான்கு எம்எல்ஏக்களிடம் மொத்தம் ரூ. 1000 கோடி பேரம் பேசினர்" என குறிப்பிட்டார். தொடர்ந்து, பண்ணை வீட்டில் பேரம் பேசியபோது, நான்கு எம்எல்ஏக்களும், போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த இடைத்தரகர்களை கைது செய்தனர். 

ராம்சந்திர பாரதி (எ) சதிஷ் சர்மா, நந்த குமார், சிம்ஹயாஜி ஸ்வாமித் ஆகிய மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், 14 நாள்கள் சிறையிலடைக்கவும் உத்தரவிடப்பட்டது. பாஜகவை சேர்ந்த ராமசந்திர பாரதி, நந்த குமார் ஆகியோர் தன்நை சந்தித்து, பாஜகவில் சேர்ந்தால் ரூ. 100 கோடி தருவதாக கூறினர் என  கடந்த புதன்கிழமை, டிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். 

மேலும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவர்கள் மீது சிபிஐ மூலம் குற்ற வழக்குகள் தொடுக்கப்படும் என மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் படிக்க | குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022: தேதிகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News