24 மணி நேரத்தில் 26 பேரை காவு வாங்கிய கேரளா கனமழை!!

கேரளாவில் தொடர்நது கனமழை பெய்து வரும் காரணத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2018, 08:57 AM IST
24 மணி நேரத்தில் 26 பேரை காவு வாங்கிய கேரளா கனமழை!! title=

கேரளாவில் தொடர்நது கனமழை பெய்து வரும் காரணத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளா-கர்நாடக எல்லை பகுதியில் தொடர்நது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அரளம், அய்யங்கண்ணு, கேளகம், உளிக்கல மற்றும் கனிச்சார் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 

கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள 78 அணைகளில் 24 அணைகள் நிரம்பிவிட்டன.

இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளத்தால் 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனம் முதல் மிக கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இடுக்கி, கொல்லம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News