Budget 2024: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன...? யார் யாருக்கு குட் நியூஸ்?

Budget 2024: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை இங்கு ஒவ்வொன்றாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 23, 2024, 02:11 PM IST
  • தங்கம், வெள்ளி சார்ந்த சுங்க வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
  • ரேஷனில் பொருள் வாங்குபவர்களுக்கு அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
  • பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Budget 2024: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன...? யார் யாருக்கு குட் நியூஸ்? title=

Budget 2024 Important Highlights: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஏழாவது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை தாக்கல் செய்து தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிவித்தார். இந்நிலையில், 2024-25 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை இங்கு ஒவ்வொன்றாக காணலாம்.

விவசாயத்துறை 

விவசாயத்துறைக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கும், அவர்களின் நிலங்களுக்கும் சிறப்பான பாதுகாப்பை அளிக்கும் வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் டிஜிட்டல் மயம் புகுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனுடன் அடுத்த வரும் இரண்டு ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி பேரை இயற்கை வேளாண்மையில் (Organic Farming) ஈடுபடுத்தப்படுவரா்கள் என தெரிவிக்கப்பட்டது. கடுகு, சூரிய காந்தி, பருப்பு வகைகள், நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கமளிக்கப்படும். 

கரீப் கல்யாண் அன்னா யோஜனா திட்டம் நீட்டிப்பு

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னா யோஜனா (Pradhan Mantiri Garib Kalyan Anna Yojana) திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ரேஷன் பயனாளிக்கு, பொது விநியோகத் திட்டம் மூலம் மாதம் 5 கிலோ உணவுத் தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். இதனால், சுமார் 80 கோடி மக்களுக்கு பயனளிக்கும்.

மேலும் படிக்க | Budget 2024 Live Updates: நிறைவடைந்தது பட்ஜெட் உரை... புதிய வரி விதிப்பில் முக்கிய மாற்றம் - அனைத்தும் இதோ!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் அடிப்படையில் நகர்ப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு 1 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும் 3 கோடி வீடுகள் நாடு முழுவதும் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்கள் நலன்

அனைத்து முறையான துறைகளிலும் பணிபுரியும்போது முதல்முறை பணியாளர்கள், தங்களின் ஒரு மாத ஊதியத்தை அரசு சார்பில் பெறுவார்கள். ஒரு மாத சம்பளம் ரூ.15,000 வரை நேரடி பலன் பரிமாற்றமாக (DBT) மூன்று தவணைகளில் வழங்கப்படும். நிறுவனத்தில் ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் அவர்களின் EPFO ​​பங்களிப்புக்காக 2 ஆண்டுகளுக்கு முதலாளிகளுக்கு மாதத்திற்கு ₹3,000 வரை திருப்பிச் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதி வரம்பு மாதம் ரூ. 1 லட்சம் சம்பளமாக இருக்கும்.

பெண்கள் நலன்

தொழில்துறையுடன் இணைந்து பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைத்து தரப்படும். இதனால், தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பும் அதிகரிக்கும், இதன்மூலம், அவர்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. மகளிர் சார்ந்த திட்டங்களுக்காக ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

சுங்க வரி குறைப்பு

தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரியை குறைத்துள்ளது. குறிப்பாக, 15 சதவீதத்தில் இருந்த சுங்க வரியை 6 சதவீதத்திற்கு குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாட்டினத்திற்கு சுங்க வரி 6.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மொபைல் போன் மற்றும் அதன் உதிரிபாகங்களின் சுங்க வரி 15% ஆக குறைக்கப்பட்டது. லித்தியம், காப்பர், கோபால்ட் உள்ளிட்ட கனிமங்களை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறை

100 நகரங்களிலும், அதற்கு அருகாமை பகுதிகளிலும் முதலீட்டுக்குத் தயாராக இருக்கும் பிளக் அண்ட் ப்ளே தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழில்துறை தாழ்வார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12 தொழில் பூங்காக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. NPS வாத்சாலயா திட்டம், புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தின் அடுக்குகளில் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.  

மேலும் படிக்க | Budget 2024: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News