Bank Holidays August 2021: ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் கிட்டத்தட்ட மாதத்தின் பாதி நாட்கள் என்ற அளவில் மூடப்பட்டிருக்கும். ரிசர்வ் வங்கி வழங்கிய விடுமுறை பட்டியலில் சில பிராந்திய விடுமுறைகளும் உள்ளன. அதாவது, அந்த நாளில் சில மாநிலங்களில் மட்டுமே வங்கிகள் மூடப்படும், மற்ற இடங்களில் திறந்திருக்கும். ஆகஸ்ட் மாதத்தில், சில இடங்களில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளில் விடுமுறை இருக்கும். அதன் முழு விபரம்:
7 நாட்கள் ஞாயிறு மற்றும் சனிக்கிழமை விடுமுறை
1 ஆகஸ்ட் 2021 அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை, எனவே மாதம் வங்கி விடுமுறையுடன் தொடங்குகிறது. இதற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகஸ்ட் 8, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 29 ஆகிய தேதிகளில் வரும். பின்னர் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 28 அன்று விடுமுறை இருக்கும். அதாவது, ஞாயிற்றுக்கிழமை 5 விடுமுறை நாட்களும், சனிக்கிழமை 2 விடுமுறை நாட்கள் உட்பட, 7 விடுமுறை நாட்கள் ஞாயிறு மற்றும் சனிக்கிழமைகளுக்கு மட்டுமே வந்து விட்டன.
ஆகஸ்ட் 13 அன்று தேசபக்தி தினத்தன்று இம்பாலில் வங்கிகள் மூடப்படும். ஆகஸ்ட் 16 ஆம் தேதி, பார்சி புத்தாண்டு அன்று பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆகஸ்ட் 19 ம் தேதி மொஹர்ரம் காரணமாக வங்கிகள் இயங்காது.
ALSO READ | New RBI Rules: வங்கி துறையில் ஊதியம், பென்ஷன், EMI தொடர்பான புதிய விதிகள் அமல்
பெங்களூரு, சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மூடப்படும். ஆகஸ்ட் 21 திரு ஓணம் மற்றும் ஆகஸ்ட் 23 அன்று ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியையொட்டி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கி விடுமுறை இருக்கும். ஆகஸ்ட் 30 கிருஷ்ண ஜென்மாஷ்டமியன்று வங்கிகள் இயங்காது. இந்த நாளில் வங்கிகள் மூடப்படும். ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஐதராபாத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 2021 இல் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
ஆகஸ்ட் 1 - ஞாயிறு
ஆகஸ்ட் 8 - ஞாயிறு
ஆகஸ்ட் 13 - தேசபக்தி நாள் - இம்பாலில் வங்கி மூடப்பட்டிருக்கும்
ஆகஸ்ட் 14 - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 15 - ஞாயிறு
ஆகஸ்ட் 16 - பார்சி புத்தாண்டு (ஷஹென்ஷாஹி) - பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஆகஸ்ட் 19 - முஹர்ரம் (ஆஷுரா) - அகர்தலா, அகமதாபாத், பெலாப்பூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் மூடப்பட்டிருக்கும்
ஆகஸ்ட் 20 - முஹர்ரம் / ஓணம் - பெங்களூர், சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஆகஸ்ட் 21- திருவோணம்- கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஆகஸ்ட் 22 - ஞாயிறு
ஆகஸ்ட் 23 - ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி - கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஆகஸ்ட் 28 - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 29 - ஞாயிறு
ஆகஸ்ட் 30 - கிருஷ்ண ஜெயந்தி - அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஆகஸ்ட் 31 - ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி - ஐதராபாத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR