புதிய வருமான வரி முறை Vs பழைய வருமான வரி முறை... வருமான வரி அடுக்கில் உள்ள மாற்றங்கள்..!!

வருமான வரி: 2021-22 நிதியாண்டில், அரசாங்கத்தால் இரண்டு விதமான முறையின் கீழ் வரி வசூலிக்கப்படுகிறது. புதிய வரி முறை, மற்றொன்று பழைய வரி முறை. இரண்டு அடுக்குகளிலும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி விகிதம் வேறுபட்டதாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 26, 2022, 01:00 PM IST
  • அரசாங்கத்தால் இரண்டு அடுக்குகளின்படி வரி வசூலிக்கப்படுகிறது. ஒன்று, புதிய வரி முறை, மற்றொன்று பழைய வரி முறை.
  • இரண்டு அடுக்குகளிலும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி விகிதம் வேறுபட்டது.
புதிய வருமான வரி முறை Vs பழைய வருமான வரி முறை...  வருமான வரி அடுக்கில் உள்ள மாற்றங்கள்..!! title=

வருமான வரி : வருமான வரி என்பது தனி நபரோ அல்லது நிறுவனமோ தாங்கள் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும்.வருமான வரிக்கு உட்பட்ட ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும். இந்தியாவில், வருமானத்தின் மீது வரி வசூலிக்க பல்வேறு வரி அடுக்குகள் உள்ளன. இந்த வரி அடுக்குகளின்படி, மக்கள் தங்கள் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

2021-22 நிதியாண்டில், அரசாங்கத்தால் இரண்டு விதமான முறையின் கீழ் வரி வசூலிக்கப்படுகிறது. புதிய வரி முறை, மற்றொன்று பழைய வரி முறை. இரண்டு அடுக்குகளிலும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி விகிதம் வேறுபட்டதாக இருக்கும்.

வருமான வரி

இன்னும் சில வாரங்களுக்குப் பிறகு, மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. மத்திய பட்ஜெட் நிதி அமைச்சர் மூலம் தாக்கல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக அரசு சலுகை அளிக்க வேண்டும் என வரி செலுத்துவோர் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், இப்போது பட்ஜெட்டுக்கு முன், வரி செலுத்துவோர் ஒரு முக்கியமான விஷயத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். 

மேலும் படிக்க | ஜனவரி மாதத்தில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையா?

வரி
உண்மையில், 2021-22 நிதியாண்டில், அரசாங்கத்தால் இரண்டு அடுக்குகளின்படி வரி வசூலிக்கப்படுகிறது. ஒன்று, புதிய வரி முறை, மற்றொன்று பழைய வரி முறை. இரண்டு அடுக்குகளிலும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி விகிதம் வேறுபட்டது. இத்தகைய சூழ்நிலையில், 20 சதவீத வருமான வரியும் வெவ்வேறு வருமானங்களில் அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிறது. புதிய வரி ஆட்சியில் எவ்வளவு வருமானத்திற்கு 20% வரி வசூலிக்கப்படுகிறது, பழைய வரி விதிப்பில் எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.

20 சதவீதம் வரி
புதிய வரி விதிப்பின்படி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், அதற்கு 20% வரி செலுத்த வேண்டும். இருப்பினும், பழைய வரி விதிப்பு முறைப்படி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால், ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை வருமானத்துக்கு 20% வரி செலுத்த வேண்டும்.

வருமான வரி அடுக்குகள் மற்றும் விகிதங்கள் 2023 (புதிய முறை)

2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம்: NIL

ஆண்டு வருமானம் ரூ 2.5- 5 லட்சம் வரை: 5%

ஆண்டு வருமானம் ரூ 5-7.5 லட்சம் வரை: 10%

ஆண்டு வருமானம் ரூ.7.50-10 லட்சம் வரை: 15%

ஆண்டு வருமானம் ரூ. 10-12.5 லட்சம் வரை: 20%

ஆண்டு வருமானம் ரூ 12.5-15 லட்சம் வரை: 25%

ஆண்டு வருமானம் ரூ 15-20 லட்சம் வரை: 30%

20 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம்: 30%

வருமான வரி அடுக்குகள் மற்றும் விகிதங்கள் 2023 (பழைய முறை )

2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம்: NIL

ஆண்டு வருமானம் ரூ 2.5- 5 லட்சம் வரை: 5%

ஆண்டு வருமானம் ரூ 5-10 லட்சம் வரை: 20%

ஆண்டு வருமானம் ரூ 10-20 லட்சம் வரை: 30%

20 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம்: 30%

மேலும் படிக்க | ரயிலில் டிக்கெட் செக் செய்யக்கூடாது! இந்த விசேஷ விதிமுறை உங்களுக்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News