நடுநடுங்க வைத்த கோழிக்கோடு விமான விபத்து! இதுதான் காரணமா?

  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. 190 பயணிகளுடன் பயணித்த அந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.

Written by - RK Spark | Last Updated : Sep 12, 2021, 02:07 PM IST
நடுநடுங்க வைத்த கோழிக்கோடு விமான விபத்து! இதுதான் காரணமா? title=

திருவனந்தபுரம் :  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. 190 பயணிகளுடன் பயணித்த அந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.

விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2 விமானிகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதற்கிடையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து 'விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு’ விசாரணை நடத்தி வந்தது.  இந்நிலையில், கோழிக்கோடு விமான விபத்து குறித்து ‘விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு’ நடத்திய விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து அந்த விசாரணை அறிக்கை நேற்று வெளியானது. அந்த விசாரணை அறிக்கையில் இந்த விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.

Plane

அந்த அறிக்கையின் தகவலின்படி, விமானத்தை தரையிறக்கும் போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே கோழிக்கோடு விமான விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், தொழில்நுட்ப கோளாறும் இந்த விபத்து ஏற்பட மற்றொரு காரணமாக இருக்கலாம் என்பதை புறக்கணித்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தரையிறக்கத்தின் போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே இந்த விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம்.விமானி விமானத்தை தரையிறக்கும்போது நிலைத்தன்மையற்ற அனுகுமுறைகளை தொடர்ந்து பின்பற்றியுள்ளார்.

மேலும், விமான கண்காணிப்பு தொழில்நுட்பம் விமானத்தை தரையிறக்குவதற்கு மேலும் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், விமான கண்காணிப்பு தொழில்நுட்பம் விமான இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்காமல் தோல்வியடைந்ததும், விமானி விமானத்தை தரையிறக்க ஒதுக்கப்பட்ட பகுதியை தாண்டி ஒடுதளத்தின் பாதி தூரத்தில் தரையிறக்கியுள்ளார்’இதுவே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ Vadivelu: வடிவேலு பஞ்சாயத்தை தீர்த்து வைத்தது நான்தான் – சீமான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News