Archeology in Agaram: கிருஷ்ண தேவராயர் காலத்து செப்புப்பட்டயம் கண்டெடுப்பு!

திருப்பத்தூரை அடுத்த அகரம் என்ற கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான செப்புப்பட்டயம் ஒன்று கிடைத்துள்ளது.இதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை தொடர்பான விவரங்கள் காணப்படுகின்றன 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 27, 2021, 03:37 PM IST
  • கிருஷ்ணதேவராயர் ஆட்சி கால செப்புப் பட்டயம்
  • திருப்பத்தூரில் கிடைத்தது
  • திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு கொடுத்த நன்கொடை விவரம்
Archeology in Agaram: கிருஷ்ண தேவராயர் காலத்து செப்புப்பட்டயம் கண்டெடுப்பு! title=

தமிழ்நாட்டின் திருப்பத்தூரை அடுத்த அகரம் என்ற கிராமத்தில் ஆ.பிரபு என்ற பேராசிரியர் தலைமையிலான குழு தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். இந்த குழுவினருக்கு 600 ஆண்டுகள் பழமையான செப்புப்பட்டயம் ஒன்று கிடைத்துள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டதில் ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் கிடைத்துள்ளன. திருப்பத்தூர் மாவட்டம் அகரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயணசுவாமி கோயில் தர்மகர்த்தா பலராமன் என்பவரிடம் செப்புப்பட்டயம் ஒன்று இருந்தது. அதை பெற்ற ஆய்வுக் குழுவினர், அதை படித்துப் பார்த்தபோது, அது விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயர் காலத்துச் செப்புப் பட்டயம் என்பது தெரியவந்துள்ளது. 

Also Read | Tokyo Olympics: மீராபாய் சானுவின் வெள்ளி பதக்கம், தங்கமாக மாறுமா?
 
615 கிராம் எடை, 36 செமீ நீளம், 23.5 செமீ., அகலம் கொண்ட செப்புப்பட்டயத்தின் மேற்புறம், சூரியன், பிறைச்சந்திரன் சாட்சியங்களாகவும், அதற்கு கீழே வலதுபுறம் விநாயகர் உருவமும், இடதுபுறம் காளை உருவமும் நடுவே சிவலிங்கமும் வரையப்பட்டுள்ளன. 

இதன் கீழே ‘சிவன் துணை ஸ்ரீ அருணாத்திரியீஸ்வரர் சாதனப்பட்டயம்’ எனத் தொடங்கி 46 வரிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த செப்புப்பட்டயமானது, கிபி 1515ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. 

தொண்டை மண்டலத்தில் உள்ள 24 கோட்டங்கள் 79 வளநாடுகளில் வசித்த சைவ வேளாளர்கள் இணைந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கல்யாணத்துக்கும், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நந்தன வனப் பராமரிப்புக்கும் நன்கொடை வழங்கி விவரங்கள் இந்த செப்புப்பட்டயத்தில் காணப்படுகிறது.

Also Read | ‘உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது’: பவானி தேவிக்கு பிரதமர் ஆறுதல்

இந்த செப்புப்பட்டயத்தை பாதுகாப்பவருக்கு வாக்கு சித்தி, உடல் ஆரோக்கியம், செல்வ வளம் கிடைக்கும். இந்த செப்புப்பட்டயத்திற்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு, பசுவைக்கொன்ற, சிசுவைக்கொன்ற கோஷங்களுக், பிரம்மஹத்தி தோஷமும் ஏற்படும் என்றும் எழுதப்பட்டுள்ளது.
 
தொண்டை மண்டலத்தின் 24 கோட்டங்களின் பெயர்களும் இந்த செப்பேட்டில் இடம்பெற்றுள்ளது. அவை: புழல் கோட்டம், புலியனூர் கோட்டம், மடியகாட்டுக்கோட்டம், மண்ணூர் கோட்டம், செங்காடுக்கோட்டம், பயனூர் கோட்டம், எயில் கோட்டம், தாமல்கோட்டம், ஊத்துக்கோட்டம், களத்தூர் கோட்டம், செம்மூர் கோட்டம், இத்தூர்கோட்டம், ஆழூர்கோட்டம், வெங்குணக்கோட்டம், பல் குணக்கோட்டம், இளங்காட்டுக்கோட்டம், காளியூர் கோட்டம், சிறுகனூர்கோட்டம், படூர்கோட்டம், கடிகைக்கோட்டம், செந்தீரக்கோட்டம், குணபத்திரக்கோட்டம், வேங்கிடக்கோட்டம், வேலூர் கோட்டம் ஆகியவை ஆகும்.

இந்த செப்புப் பட்டயத்தின் மூலம் கிருஷ்ண தேவராயர் காலத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை தான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இனி மேலதிக ஆராய்ச்சியில் பல்வேறு விஷயங்கள் கிரகிக்கப்படலாம்.

Also Read | ₹6200 கோடிக்கு ₹14,000 பறிமுதல் செய்வதா; விஜய் மால்லையா காட்டம்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News