Latest News Chhattisgarh Bus Accident : சத்தீஸ்கரில் உள்ள ராய்பூர்-துர்க் சாலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பேருந்து விபத்து:
சத்தீஸ்கரில் உள்ள துர்க் மாவட்டத்தில் துர்க்-ராயூர் சாலையில் நேற்று இரவு வேலை ஆட்களை ஏற்றிச்செல்லும் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராமல் பேருந்து கட்டுப்பாட்டை மீறி சென்று, 50 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் தற்போது 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கியவர்கள், கெடியா டிஸ்டில்லரீஸ் எனும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் என்பதும், இந்த பேருந்தில் அந்த நிறுவனத்தை சேர்ந்த 40 பேர் பயணித்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி..
கெடியா டிஸ்டில்லரி நிறுவனம், விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு, தலா ரூ.10 லட்சம் வழங்கவும், குடும்பத்தை சேர்ந்த இன்னொருவருக்கு வேலை வழங்கவும் உறுதியளித்துள்ளது. மேலும், காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களின் செலவுகளையும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என கூறியிருக்கிறது.
மேலும் படிக்க | அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு.. “கைது செய்தது சரி தான்” டெல்லி உயர் நீதிமன்றம்
விபத்து நடந்தது எப்படி?
கெடியா டிஸ்டில்லரி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், வேலை முடித்து விட்டு பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் இந்த சம்பவம் நடைப்பெற்றிருக்கிறது. அப்போது, துர்க் சாலையில் உள்ள 50 அடி பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்துள்ளார்.
பிரதமர், குடியரசு தலைவர் இரங்கல்:
2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கரில் நடைப்பெற்றுள்ள கோர விபத்து குறித்து ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும், விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற வேண்டி பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதே போல, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், இந்த செய்தி தனக்கு மிகவும் அதிர்ச்சியை தந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது இது போன்ற ஒரு கோர விபத்து நடந்துள்ளது, நாட்டு மக்களை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. விபத்தில் சிக்கிய சிலர் தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், அவர்கள் விரைவில் குணம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி, 50 அடி பள்ளத்தில் விழுந்த பஸ், இன்னும் எடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க | அதெல்லாம் பொய்யுங்க.. நாங்க சொல்வது தான் உண்மை -தேர்தல் பேரணியில் முழங்கிய அமித் ஷா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ