பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஜூலை 17-18 தேதிகளில் காங்கிரஸ் கூட்டி வரும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் குறைந்தது 24 அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு எட்டு புதிய கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் 24 அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
"மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.), கொங்கு தேச மக்கள் கட்சி (KDMK), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP), அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), கேரள காங்கிரஸ் (ஜோசப்), மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) ஆகியோர் கூட்டத்தில் சேரும் புதிய அரசியல் கட்சிகளில் அடங்கும்," என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்த எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டதை நினைவுறுத்தி, காங்கிரஸ் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில். “நமது ஜனநாயக அரசியலுக்கு அச்சுறுத்தலான பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை நாங்கள் விவாதித்து, அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாகப் போராடுவது குறித்து ஒருமனதாக உடன்படிக்கைக்கு வந்ததால், இந்த சந்திப்பு பெரும் வெற்றி பெற்றது,” என்று கார்கே தனது அழைப்புக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் மீண்டும் சந்திப்பதற்கு நாங்கள் மேலும் ஒப்புக்கொண்டோம் என்று காங்கிரஸ் தலைவர் மேலும் தலைவர்களுக்கு நினைவுபடுத்தினார். "இந்த விவாதங்களைத் தொடர்வதும், நாம் இன்னும் துரிதமாக செயல்படுவதும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். நமது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இடத்தை மாற்றிய எதிர்கட்சிகள்... சிம்லாவில் கூட்டத்தை கலைத்தது ஏன் - முழு விவரம்!
"அதன் தொடர்ச்சியாக, ஜூலை 17 அன்று மாலை 6.00 மணிக்கு பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் ஜூலை 18, 2023 அன்று காலை 11.00 மணி முதல் தொடரும். உங்களை பெங்களூரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். கார்கே தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்காக பெங்களூரு செல்ல உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தார். 15க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்ற முதல் எதிர்க்கட்சி ஒற்றுமைக் கூட்டம் ஜூன் 23 அன்று பாட்னாவில் நடைபெற்றது, அதை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூட்டினார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, என்சிபி தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சிம்லாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் தொடர்மழை காரணமாக பெங்களூருக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பெங்களூருவில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கான எதிர்கட்சிகளின் வியூகத்தை இதில் தீர்மானிப்பார்கள் எனவும், பிரதமர் வேட்பாளர் குறித்து முக்கிய அறிவிப்பு இதில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில், காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தற்போது எதிர்கட்சிகளின் கூட்டம் அங்கு நடைபெறுவது பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க | 60 மூட்டை தக்காளி திருட்டு... இன்றைய விலையில் அது எத்தனை லட்சம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ