IDBI வங்கியின் 51% பங்குகளை கைப்பற்றியது LIC!

IDBI வங்கியின் 51% பங்குகளை நாட்டின் பிரதாண காப்பீடு நிறுவனமான LIC கைப்பற்றியுள்ளது!

Last Updated : Jan 22, 2019, 08:06 PM IST
IDBI வங்கியின் 51% பங்குகளை கைப்பற்றியது LIC! title=

IDBI வங்கியின் 51% பங்குகளை நாட்டின் பிரதாண காப்பீடு நிறுவனமான LIC கைப்பற்றியுள்ளது!

IDBI வங்கியை வாங்குவதற்கான முயற்சியை கடந்த 2018 ஜூன் முதல் LIC மேற்கொண்டு வருகிறது. பின்னர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்பதலை அளித்தது. இந்நிலையில் தற்போது LIC நிறுவனத்தின் கைப்பற்றுதல் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது.

தற்போது IDBI வங்கியின் 51% பங்குகளைக் கைப்பறியதன் மூலம் அதன் பெரும்பான்மை பங்குதாரராக LIC உருவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக IDBI வங்கி தரப்பு, பங்குச்சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,...  LIC நிறுவனம் IDBI வங்கியின் பெரும்பாலான பங்குகளைக் கைப்பற்றியிருப்பது, பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

IDBI வங்கி கடந்த செப்டம்பர் காலாண்டில் ₹3,602.49 கோடி நட்டத்தை பதிவு செய்துள்ளது. இதன் மொத்த வாராக்கடன் 31.78% உள்ளது. ரிசர்வ் வங்கியின் உடனடி சீர்திருத்த நடவடிக்கையின் கீழ் IDBI வங்கியும் கொண்டுவரப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  தற்போதைய நிலவரப்படி IDBI வங்கிக்கு 1.5 கோடி வாடிக்கையாளர்கள், 18,000 ஊழியர்கள் உள்ளனர்.

கடந்த காலாண்டில் IDBI நட்டத்தை சந்திருக்கும் நிலையிலும் தற்போது LIC இந்த வங்கியின் பங்குகளை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News