சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் நடவடிக்கைகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
Live-streaming of important court hearings or proceedings of Supreme Court: Supreme Court asks the Attorney General (AG), KK Venugopal to submit a detailed proposed guidelines on the issue by July 23.
— ANI (@ANI) July 9, 2018
சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம். இதன் மூலம் கிராமப்புற மக்களும் வழக்கு விசாரணை குறித்து அறிந்து கொள்ள முடியும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவிப்புக்கு மத்திய அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நேரடி ஒளிபரப்பிற்கான வழிகாட்டு நெரிமுறைகளை வரும் ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.