Ayodhya Ramar Temple Consecration Ceremony Live Updates in Tamil : அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.. இந்த வரலாற்று நிகழ்வில் கலந்துகொள்ள பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குடமுழுக்கு விழாவிற்காக அயோத்தி நகரம் முழுவதும் மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் வண்ண பூக்களினாலும், மின்விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வருகையால் அயோத்தி நகரமே விழாக்கோலத்தில் காட்சியளிக்கிறது. அயோத்தியில் குவிந்துள்ள பக்தர்கள் ராமர் பாடல்களை பாடி கொண்டாடி வருகின்றனர்.