Himachal Pradesh Election 2022 Live Updates: இமாச்சல் தேர்தலில் வாகைச்சூடும் காங்கிரஸ், தொண்டர்கள் கொண்டாட்டம்

HP Assembly Elections Results 2022 Live: இமாச்சல் தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி. யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 8, 2022, 05:21 PM IST
Live Blog

HP Assembly Elections Results 2022 live update: ஹிமாச்சலில் முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் 68 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின.

இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 24-41 இடங்களும், காங்கிரஸுக்கு 20-40 இடங்களும் கிடைக்கும் என கடந்த திங்களன்று கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன. 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டசபைக்கு ஆட்சி அமைக்க 35 இடங்கள் தேவை. ஒருசில ஊடங்களைத் தவிர, அனைத்து கருத்துக்கணிப்புகளும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்கு வெற்றி பெரும் எனக் கூறியுள்ளனர். எவ்வாறாயினும், இன்னும் சற்று நேரத்தில் உண்மை நிலவரம் தெரிந்துவிடும். 

இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது Zee Tamil News தளத்துடன் இணைந்திருங்கள். 

சமூக ஊடகங்களில் நாம் ஒன்றாக பயணம் செய்ய பின்தொடரவும்.

முகநூல் : @ZEETamilNews
ட்விட்டர் : @ZeeTamilNews
டெலிகிராம் : https://t.me/ZeeTamilNews 

8 December, 2022

  • 17:10 PM

    மனமார்ந்த நன்றி -ராகுல் காந்தி ட்வீட்
    இந்த உறுதியான வெற்றிக்காக ஹிமாச்சல பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி.

    அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்த வெற்றிக்கான வாழ்த்துக்களுக்குத் தகுதியானது.

    பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன்.

    -ராகுல் காந்தி, காங்கிரஸ்.

     

  • 16:54 PM

    இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் விவரங்கள்
    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி பெற்று 5 இடங்களில் முன்னிலை; பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

     

  • 16:33 PM

    இது உணர்ச்சிகரமான தருணம்: லைவர் பிரதீபா சிங், காங்கிரஸ்
    "மக்களிடம் இருந்த மறைந்த வீரபத்ர சிங்கிற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நான் பார்க்கையில், இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருக்கிறது -இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் பிரதீபா வி சிங் கூறியுள்ளார்.

     

  • 16:05 PM

    பிரியங்கா காந்தி, ராகுல் காந்திக்கு நன்றி: காங்கிரஸ் தலைவர்
    இமாச்சல பிரதேச தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மக்கள், எங்கள் தொழிலாளர்கள் மற்றும் தலைவர்களின் முயற்சியால் இந்த முடிவு கிடைத்துள்ளதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் இந்த வெற்றிக்கு பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவும் ஒரு முக்கிய காரணமாகும்: காங்கிரஸ் தலைவர்

     

  • 16:04 PM

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேட்டி
    எங்கள் பார்வையாளர்கள் மற்றும் பொறுப்புச் செயலாளர்கள் அங்கு (இமாச்சலப் பிரதேசம்) செல்கிறார்கள், அவர்கள் எப்போது ஆளுநரை சந்தித்து (காங்கிரஸ் எம்எல்ஏக்கள்) கூட்டத்தை அழைப்பது என்று முடிவு செய்வார்கள்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

  • 15:35 PM

    ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள் 2022

    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்று 23 இடங்களில் முன்னிலை; பாஜக 13 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

  • 15:04 PM

    இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ராஜினாமா
    இன்னும் சிறிது நேரத்தில் எனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்பிப்பேன்: இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்.

  • 14:43 PM

    ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள்2022
    காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்று 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்று 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வத் தகவலின் படி, காங்கிரஸ் பெரும்பான்மையான 35ஐத் தாண்டிவிட்டதாகக் காட்டுகின்றன.

     

  • 14:08 PM

    'ஆபரேஷன் தாமரை' கண்டு பயம் இல்லை
    நாங்கள் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறோம். 'ஆபரேஷன் தாமரை' கண்டு நாங்கள் பயப்படவில்லை -இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா.

     

  • 13:46 PM

    இமாச்சலப் பிரதேசத்தில் யாருக்கு முன்னிலை
    இமாச்சலப் பிரதேசத்தில், ஜுப்பல்-கோட்காய், கின்னார், சம்பா & சிம்லா ஆகிய இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று 36 இடங்களில் முன்னிலை. மண்டி, நூர்பூர், பச்சாட், பௌண்டா சாஹிப் மற்றும் சுந்தர்நகர் ஆகிய இடங்களில் பாஜக வெற்றி பெற்று 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

     

  • 13:43 PM

    ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள்2022
    காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி பெற்று 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்று 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

     

  • 13:35 PM

    குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு மூன்றாவது இடமா? 
    குஜராத் தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி வேட்பாளர் இசுதன் காத்வி பின்தங்கியுள்ளார், பாஜகவின் ஹர்தாஸ்பாய் முன்னிலையில் உள்ளார்.

  • 13:13 PM

    காங்கிரஸ் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் -எஸ்.எஸ்.சுகு, காங்கிரஸ்
    இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக தன்னை வலுவாக இருப்பதாகக் கருதினர். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மாநிலத்திற்கு பிரச்சாரம் செய்ய பல முறை வருகை தந்தனர், ஆனால் இன்று இங்கு காங்கிரஸ் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகிறது: காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எஸ்.சுகு

  • 12:38 PM

    காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்
    இமாச்சலப் பிரதேசத்தில் 40 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதால், சிம்லாவில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். 

     

  • 12:31 PM

    காங்கிரஸ் முன்னிலை.. 
    இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் 40 இடங்களிலும், பாஜக- 24 & 1 (வெற்றி) இடங்களிலும், சுயேட்சை - 3 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

     

  • 12:06 PM

    பாஜக எதையும் செய்யும்.. ஜனநாயகத்தை காப்போம் -விக்ரமாதித்ய சிங்
    இமாச்சலப் பிரதேசத்தில் வெற்றி பெறும் எம்எல்ஏக்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங், "பாஜகவால் எதையும் செய்யும் என்பதால் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம்" என்றார். 

    காங்கிரஸ் 38 இடங்களிலும், பாஜக - 26 (முன்னிலை) & 1 வெற்றி, மற்றும் சுயேச்சை - 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.

  • 11:59 AM

    இமாச்சல பிரதேசத்தில் அறுதிப் பெரும்பான்மை பெறும் காங்கிரஸ்
    இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்: இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 27 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். இமாச்சலில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 35 ஆகும்.

    Himachal Pradesh Election Results

  • 11:49 AM

    எந்த கட்சிக்கு ஆதரவு? சுயேட்சை வேட்பாளர் ஆஷிஷ் சர்மா
    இமாச்சல பிரதேசம் தேர்தல் முடிவுகள்: தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, ஹமிர்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் ஆஷிஷ் சர்மா முன்னிலை வகிக்கிறார்.

    அதுக்குறித்து சுயேட்சை வேட்பாளர் ஆஷிஷ் சர்மா கூறுகையில், நான் இறுதி முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். இறுதி முடிவுகள் வெளியான பிறகு (வேறு கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து) எந்த முடிவையும் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

  • 11:14 AM

    பாஜக வேட்பாளர் ராகேஷ் குமார் வெற்றி:
    இந்திய தேர்தல் ஆணையத்தின்படி இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுந்தர்நகர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராகேஷ் குமார் வெற்றி பெற்றார்.

     

  • 11:13 AM

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்: பவன் கேரா, காங்கிரஸ்
    நாங்கள் அறுதிப் பெரும்பான்மையை நோக்கிச் சென்று நிலையான ஆட்சியை மாநிலத்தில் அமைக்கப்போகிறோம். சேற்றை வாரி இறைக்கும் எந்த ஆபரேஷன் இங்கே வேலைக்கு ஆகாது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்: இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பவன் கேரா.

     

  • 10:47 AM

    ஹிமாச்சல பிரதேச தேர்தல்: ஹிமாச்சலில் நான்கு சுயேச்சைகள் (3 பாஜக மற்றும் 1 காங்கிரஸ் ) முன்னிலையில் உள்ளனர்.

     

  • 10:44 AM

    யாருக்கு மகுடம்.. பரபரப்பு கட்டத்தில் இமாச்சல பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 
    இமாச்சல பிரதேச தேர்தல் | காங்கிரஸ் 33 இடங்களிலும், பாஜக 31 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவை என்ற நிலயில், தொடரும் வாக்கு எண்ணிக்கை.

     

  • 10:18 AM

    ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள்: இன்னும் முடிவாகவில்லை

    ஹிமாச்சலப் பிரதேசத்தில் எந்த கட்சியும் பெரும்பான்மையை எட்டவில்லை. காங்கிரஸ் 33 இடங்களிலும், பாஜக 31 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன

  • 10:04 AM

    இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்: முன்னணி வேட்பாளர்கள்

    செராஜ் தொகுதியில் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், தரங்கில் இருந்து பாஜகவின் பூரன் சந்த், முன்னாள் அமைச்சர் நரேந்தர் பிரகதாவின் மகன் சேத்தன் பிரகடா, ஜுப்பல் கோட்காயில், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமின் மகன் அனில் ஷர்மா, மண்டி சதாரில் காங்கிரஸின் ஜகத் சிங் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நேகி, முன்னாள் துணை சபாநாயகர், கின்னவுர்.லிட்டியைச் சேர்ந்தவர்

  • 09:43 AM

    இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்: காங்கிரசை விட பாஜக முன்னிலை பெற்றுள்ளது

    பாஜக கட்சி 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக வெற்றி பெற்றால், மாநிலத்தில் மாற்று அரசாங்கத்தின் போக்கை மாற்றும்.

  • 09:20 AM

    இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்: செராஜ் தொகுதியில் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 3,763 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

     

  • 09:00 AM

    இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்: காங்க்ரா மாவட்டத்தில் மொத்தமுள்ள 15 இடங்களில் காங்கிரஸ் 9 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

  • 08:48 AM

    ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள்: தற்போது காங்கிரசை விட பாஜக முன்னிலை பெற்றுள்ளது

    இப்போது பாஜக கட்சி 36 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. ஆம் ஆத்மி எந்த இடத்திலும் முன்னிலை வகிக்கவில்லை

  • 08:39 AM

    இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் முன்னிலை! 

    காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும், பாஜக 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

  • 08:28 AM

    இமாச்சலில் பாஜகவும் காங்கிரஸும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன

     

  • 08:21 AM

    சரிசமமான முன்னிலை!

    ஹிமாச்சல் பிரதேசத்தில் பிஜேபி மற்றும் காங்கிரஸ் சரிசமமான முன்னிலையில் உள்ளன.

  • 08:07 AM

    ஹிமாச்சல பிரதேச தேர்தல்: வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை ரிசார்ட்டுக்கு மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

  • 07:50 AM

    இமாச்சல பிரதேசத்தை பாஜகவிடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.  2022 இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒரு நல்ல தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சியாக அங்கீகாரம் அளிக்க உதவும்.

     

Trending News