LIVE: Gujarat Election 2022 Exit Polls Result - வெளியானது தேர்தல் கருத்துக்கணிப்புகள் - குஜராத், ஹிமாச்சலில் முன்னணியில் யார்?

Gujarat Election 2022 Exit Polls Result : குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு பின்னான தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Dec 5, 2022, 08:09 PM IST
Live Blog

Gujarat Election 2022 Exit Polls Result : குஜராத் தேர்தல் 2022 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வடக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களின் 14 மாவட்டங்களில் உள்ள 93 இடங்களுக்கு இன்று (டிசம்பர் 5) நடைபெற்றது. Zee News-இன் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும். Zee News-இன் குஜராத் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய (Exit Polls) முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 

குஜராத் மக்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள்?

தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP)மற்றும் பிற கட்சிகள் போட்டியிட்டன. பிரதமர் நரேந்திர மோடியும், 100 வயதான அவரது தாயார் ஹீராபென் மோடியும் இன்று தங்களின் வாக்குகளை செலுத்தினர். மத்திய அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி ஆகியோரும் இன்று வாக்களித்தனர்.

குஜராத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 285 சுயேச்சைகள் உட்பட 800க்கும்  மேற்பட்ட வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கையை நோக்கி காத்திருக்கின்றனர். குஜராத் மட்டுமின்றி, ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இரு மாநிலங்களின் தேர்வு முடிவுகளும் வரும் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்படுகிறது.

5 December, 2022

  • 00:41 AM

    NEWS 24 - TODAY'S CHANAKYA குஜராத் கருத்துக்கணிப்பு

    • பாஜக: 150 தொகுதிகள்
    • காங்கிரஸ்: 19 தொகுதிகள்
    • ஆம் ஆத்மி: 11 

    NEWS 24 - TODAY'S CHANAKYA ஹிமாச்சல் கருத்துக்கணிப்பு

    • பாஜக: 33 தொகுதிகள்
    • காங்கிரஸ்: 33 தொகுதிகள்
    • ஆம் ஆத்மி: 0
  • 00:39 AM

    INDIA TV - MATRIZE குஜராத் கருத்துக்கணிப்பு 

    • பாஜக: 112-121 தொகுதிகள்
    • காங்கிரஸ்: 51-61 தொகுதிகள்
    • ஆம் ஆத்மி: 4-7 தொகுதிகள்

    INDIA TV - MATRIZE ஹிமாச்சல் கருத்துக்கணிப்பு

    • பாஜக: 35-40 தொகுதிகள்
    • காங்கிரஸ்: 26-31 தொகுதிகள்
    • ஆம் ஆத்மி: 0 
  • 00:36 AM

    ABP - CVOTER குஜராத் கருத்துக்கணிப்பு

    • பாஜக: 128-140 தொகுதிகள்
    • காங்கிரஸ்: 31-43 தொகுதிகள்
    • ஆம் ஆத்மி: 3-11 தொகுதிகள்

    ABP - CVOTER ஹிமாச்சல் கருத்துக்கணிப்பு

    • பாஜக: 33-41 தொகுதிகள்
    • காங்கிரஸ்: 24-32 தொகுதிகள்
    • ஆம் ஆத்மி: 0
  • 00:36 AM

    AAJ TAK - AXIS MY INDIA குஜராத்  கருத்துக்கணிப்பு

    • பாஜக: 129-151 தொகுதிகள்
    • காங்கிரஸ்: 16-30 தொகுதிகள்
    • ஆம் ஆத்மி: 9-21 தொகுதிகள்

    AAJ TAK - AXIS MY INDIA ஹிமாச்சல் கருத்துக்கணிப்பு

    • பாஜக: 24-34 தொகுதிகள்
    • காங்கிரஸ்: 30-40 தொகுதிகள்
    • ஆம் ஆத்மி: 0
  • 00:34 AM

    TIMES NOW - ETG குஜராத் கருத்துக்கணிப்பு 

    • பாஜக: 135-145 தொகுதிகள்
    • காங்கிரஸ்: 24-34 தொகுதிகள்
    • ஆம் ஆத்மி: 6-16 தொகுதிகள்

    TIMES NOW - ETG ஹிமாச்சல் கருத்துக்கணிப்பு 

    பாஜக: 34-42 தொகுதிகள்
    காங்கிரஸ்: 24-32 தொகுதிகள்
    ஆம் ஆத்மி: 0

  • 20:51 PM

    குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு - வாக்குப்பங்கு

    முதல் முறை வாக்காளர்கள்

    பாஜக: 49%, காங்: 32%, ஆம் ஆத்மி: 13%, மற்றவர்கள்: 6%

    பெண் வாக்காளர்கள்

    பாஜக: 52%, காங்: 41%, ஆம் ஆத்மி: 4%, மற்றவர்கள்: 3%

    நகர்ப்புற வாக்காளர்கள்

    பாஜக: 52%, காங்: 36%, ஆம் ஆத்மி: 9%, மற்றவர்கள்: 3%

    கிராமப்புற வாக்காளர்கள்

    பாஜக: 49%, காங்: 44%, ஆம் ஆத்மி: 5%

  • 20:19 PM

    Zee News - BARC ஒட்டுமொத்த குஜராத் தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு

    பாஜக: 110-125 இடங்கள்

    காங்கிரஸ்: 45-60 இடங்கள்

    ஆம் ஆத்மி: 1-5 இடங்கள்

    மற்றவை: 0-4 இடங்கள்

  • 20:18 PM

    Zee News - BARC Exit Poll result 

    மத்திய குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவு (வாக்கு பங்கு)

    பாஜக: 49% வாக்குகள்
    காங்கிரஸ்: 40% வாக்குகள்
    ஆம் ஆத்மி: 9% வாக்குகள்

    மத்திய குஜராத்தில் உள்ள 54 இடங்களில் பாஜக 35 இடங்களைப் பெறலாம். காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கலாம்.

  • 20:09 PM

    Zee News - BARC Exit Poll result 

    வடக்கு குஜராத் வாக்குகள்: (32 தொகுதிகள்)

    பாஜக: 49%
    காங்கிரஸ்: 40%
    AAP: 1%
    மற்றவை: 4%

  • 20:01 PM

    TV9 குஜராத்தி

    பாஜக 125-130 தொகுதிகள் கிடைக்கும்.

    காங்கிரஸ் கட்சிக்கு 40-50 இடங்கள் கிடைக்கும்.

    ஆம் ஆத்மிக்கு 3-5 இடங்களை கைப்பற்றும். 

  • 19:58 PM

    News X - Jan Ki Baat கருத்துக்கணிப்பு

    பாஜக 117-140 இடங்களை கைப்பற்றும்.

    காங்கிரஸ் 34-51 இடங்களை கைப்பற்றும்.

    ஆம் ஆத்மி 6-13 இடங்கள் கிடைக்கும். 

  • 19:56 PM

    Republic TV - P MARQ கருத்துக்கணிப்புகள்

    பாஜக 128-148 தொகுதிகளை வெல்லும் என கணித்துள்ளது.

    காங்கிரஸ்-என்சிபி கூட்டணி, 30 முதல் 42 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது. கடந்த முறை, காங்கிரஸ் பெற்ற 77 இடங்களை விட இது குறைவு.

    2018இல் எந்த இடத்திலும் வெற்றி பெறாத ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் 2 முதல் 10 இடங்கள் வரை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • 19:35 PM

    குஜராத் சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT ஆகியவை சீல் வைக்கப்பட்டு கடும் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.

     

  • 19:07 PM

    ஹிமாச்சல பிரதேச தேர்தல் கருத்துக்கணிப்பு: தொகுதி பங்கீடு

    இமாச்சல பிரதேச சட்டசபையில் 68 தொகுதிகள் உள்ளன. இமாச்சலப் பிரதேச தேர்தல் குறித்த Zee News-இன் கருத்துக்கணிப்பின்படி, பாஜக 35-40 இடங்களிலும், காங்கிரஸ் 20-25 இடங்களிலும், ஆம் ஆத்மி 0-3 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது. மற்ற கட்சிகள் 1-5 இடங்களைக் கைப்பற்றலாம்.

  • 19:06 PM

    Zee News-இன் கருத்துக்கணிப்பின்படி, வாக்குப் பங்கீடு மற்றும் வெற்றிபெறக்கூடிய தொகுதிகள் ஆகியவற்றில் பாஜக முதலிடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சி 2ஆவது இடத்தில் உள்ளது.

     

  • 18:58 PM

    ஹிமாச்சல் சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் - வாக்குப் பங்கு

    பாஜக: 47%
    காங்கிரஸ்: 41%
    AAP: 2%
    மற்றவை: 10%(Zee News Exit Poll 2022 படி)

Trending News