Love Jihad: அசாதுதீன் ஒவைசிக்கு கடுமையாக பதிலடி கொடுக்கும் கிரிராஜ் சிங்

லவ் ஜிஹாத் (Love Jihad) தொடர்பாக அசாதுதீன் ஒவைசி கூறிய கருத்துக்கு கிரிராஜ் சிங் கடுமையாக பதிலடி கொடுப்பதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'லவ் ஜிஹாத்' க்கு எதிராக சட்டங்களை உருவாக்குவது குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 23, 2020, 04:49 PM IST
Love Jihad: அசாதுதீன் ஒவைசிக்கு கடுமையாக பதிலடி கொடுக்கும் கிரிராஜ் சிங்  title=

லவ் ஜிஹாத் (Love Jihad) தொடர்பாக அசாதுதீன் ஒவைசி கூறிய கருத்துக்கு கிரிராஜ் சிங் கடுமையாக பதிலடி கொடுப்பதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'லவ் ஜிஹாத்' க்கு எதிராக சட்டங்களை உருவாக்குவது குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. மறுபுறம், அனைத்து மாநில அரசுகளும் லவ் ஜிஹாத் சட்டத்தை இயற்றத் தயாராகி வருகின்றன, அதே நேரத்தில் அகில அனைத்திந்திய மஜ்லிஸ்‑இ‑இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி (All India Majlis-e-Ittehad-ul-Muslimeen (AIMIM)) தலைவர் அசாதுதீன் ஒவைசி (Asaduddin Owaisi) அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறினார். ஒவைசியின் அறிக்கைக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

ஒவைசி என்ன சொன்னார்?
லவ் ஜிஹாத் (Love Jihad)க்கு எதிரான சட்டம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். இந்த சட்டம் அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 21க்கு எதிரானது, இந்தச் சட்டத்தை உருவாக்கினால், சிறப்பு திருமணச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

எதிர் தாக்குதல்
அசாதுதீன் ஒவைசி (Asaduddin Owaisi) பிரச்சனை தொடர்பாக கருத்துக் கூறிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்" ஒவைசி போன்றவர்களுக்கு இந்தியாவை பிரித்தாளும் எண்ணம் உள்ளது, அவர்கள் நாட்டை துண்டாடும் எண்ணத்தில் செயல்படுகின்றனர்" என்று கூறியுள்ளார். சமூக நல்லிணக்கத்திற்காக, லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டியது அவசியம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், சிலர் நாடு முழுவதும் சமூக நல்லிணக்கத்தை உடைக்க வேண்டுமென்று முயற்சித்து வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நாள்தோறும் நாடு முழுவதும் அரங்கேறுகின்றன.  

உத்தரபிரதேசம் (Uttar Pradesh), மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டத்தை உருவாக்க முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உத்தரபிரதேசத்தில், லவ் ஜிஹாத்துக்கு எதிரான மசோதாவை உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு முன்வைக்கப்படலாம். லவ் ஜிஹாத் தொடர்பாக உடனடியாக சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா (Narottam Mishra) தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தின் அவசியத்தை ஹரியானா முதல்வர் மனோகர் கட்டார் மற்றும் உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News