Kerala_Flood_Relief: ரூ.1 கோடி வழங்கியது Lyca Productions!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேராளவிற்கு Lyca தயாரிப்பு நிறுவனம் ரூ.1 கோடி வழங்கியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2018, 06:51 PM IST
Kerala_Flood_Relief: ரூ.1 கோடி வழங்கியது Lyca Productions! title=

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேராளவிற்கு Lyca தயாரிப்பு நிறுவனம் ரூ.1 கோடி வழங்கியுள்ளது!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிவாரண நிதியாக ரூ.1 கோடியினை லைகா ப்ரொடக்சன்ஸ் சார்பாக அந்நிறுவனத்தின் மேலாளர்கள்  நிஷந்தன் நிருதன் மற்றும் அயூப் கான் ஆகியோர் கேரள முதல்வரிடம் ஒப்படைத்தனர்.

கேரளா மாநிலத்தில் பருவமழை சற்று அதிகமாக கருணையினை காட்டிய நிலையில் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாய் உருமாறியது. வாட்டியெடுத்து மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்கள் தற்போது மீண்டு வருகின்றனர். 

மாநிலத்தில் தற்போது மழை நீர் தேக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. எனினும், ஏற்பட்டு பாதிப்புகளில் இருந்து முழுவதுமாக மீள 5 மாதங்கள் வரை ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 374 உயிர்களை பலி வாங்கிய கேரளா வெள்ளத்தின் பாதிப்பில் சிக்கிய பொதுமக்கள் தற்போது சிறப்பு முகாம்களில் இருந்து வீடு திரும்பி வருகின்றனர். 

கேரள வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பினை சரிசெய்ய பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைபடுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்பில் இருந்து கேரளாவினை மீட்டெடுக்க உலக மக்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் Lyca Productions ரூ.1 கோடி கேரளா நிவாரண நிதிக்காக அளித்துள்ளது!

Trending News