மத்திய பிரதேச பள்ளியில், பள்ளி சீருடையுடன் காந்தி தொப்பி...

இந்தியா மட்டும் அல்ல, உலகம் எங்கிளும் காந்தி தொப்பி ஒரு அரிய காட்சி பொருளாக இருக்கிறது. ஆனால் மத்திய பிரதேசத்தின் நர்சிங்க்பூரில் ஒரு பள்ளியில் குழந்தைகள் தினமும் காந்தி தொப்பியை அணிந்து வந்து ஒரு பயன்பாட்டு பொருளாக மாற்றியுள்ளனர். இது மட்டுமல்லாமல், தினமும் காந்தியின் புகழ்பெற்ற பிரார்த்தனை பாடலான “வைஷ்னோ ஜனடோ தேனே கஹியேச் ....” பாடலையும் பாடுகின்றனர்.

Last Updated : Sep 28, 2019, 03:53 PM IST
மத்திய பிரதேச பள்ளியில், பள்ளி சீருடையுடன் காந்தி தொப்பி... title=

இந்தியா மட்டும் அல்ல, உலகம் எங்கிளும் காந்தி தொப்பி ஒரு அரிய காட்சி பொருளாக இருக்கிறது. ஆனால் மத்திய பிரதேசத்தின் நர்சிங்க்பூரில் ஒரு பள்ளியில் குழந்தைகள் தினமும் காந்தி தொப்பியை அணிந்து வந்து ஒரு பயன்பாட்டு பொருளாக மாற்றியுள்ளனர். இது மட்டுமல்லாமல், தினமும் காந்தியின் புகழ்பெற்ற பிரார்த்தனை பாடலான “வைஷ்னோ ஜனடோ தேனே கஹியேச் ....” பாடலையும் பாடுகின்றனர்.

நர்சிங்பூரில் உள்ள மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பாதா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தான் இந்த நிகழ்வு தினம் நடைபெறுகிறது. மாணவர்களின் இந்த செயல்பாட்டினால் மற்ற பள்ளிகளில் இருந்து வேறுபட்டு நிற்கிறது.

“இந்த நடைமுறை எப்போது தொடங்கியது என்பது நமக்கு தெரியவில்லை, ஆனால் பள்ளி சுவரில் இந்த வழக்கும் தொடர்பான ஒரு தேதி பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்டோபர் 3, 1945 அன்று மகாத்மா காந்தி பள்ளிக்கு வந்ததாகக் கூறும் இந்த தேதி முதல் இந்த வழக்கும் இந்த பள்ளியில் நடைமுறைக்கு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் ‘சத்தியம் மற்றும் அகிம்சை கொள்கை, காந்தியின் ஆசீர்வாதங்கள் பின்பற்றுவோம்’ என்று ஒரு செய்தியும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்தி கிராமத்திற்கு விஜயம் செய்ததாக உள்ளூர்வாசிகள் நினைவு கூர்கின்றனர். அப்போதிருந்து, கிராமவாசிகள் தொப்பி அணியத் தொடங்கினர் என்றும், பள்ளியில் பல தசாப்தங்களாக இந்த பாரம்பரியம் பின்பற்ற படுவதாவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சர்மா தெரிவிக்கையில்., "நான் இந்த பள்ளியில் படிக்கும் போது இந்த தொப்பியை அணிந்தேன், இன்று நான் இங்கே ஒரு ஆசிரியராக இருக்கிறேன், எல்லோரும் இதை தொடர்ந்து செய்கிறார்கள்." என தெரிவித்தார்.

மேலும், காந்தி தொப்பியுடன், பள்ளி காந்தியின் விருப்பமான மற்றொரு பாடலான “ரகுபதி ராகவ் ராஜா ராம்” பாடலை காலை பிரார்த்தனை பாடலாக பாடுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காந்தி தொப்பிகளை அணிவதன் மூலம், குழந்தைகள் தீமைகளிலிருந்து விலகி இருக்க நம்பிக்கை பெருகின்றனர், தேசபக்தி மற்றும் சரியான மதிப்புகளை வளர்த்துக்கொள்வார்கள் என்று உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். மக்கள் நம்பிக்கையில் விளைவாகவே இன்றும் இந்த பாரம்பரியம் தொடர்கிறது.

Trending News