மகாராஷ்டிரா: விஷாவாயு தாக்கி தீயணைப்பு அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் உள்ள கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட 5 பேர் பலியானர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 1, 2018, 09:05 PM IST
மகாராஷ்டிரா: விஷாவாயு தாக்கி தீயணைப்பு அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி title=

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியில் உள்ள கிணற்றை தூர்வார தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு தொழிலாளி சுத்தப்படுத்த கிணற்றில் இறங்கினார். அப்பொழுது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டது. இதைப்பார்த்த மற்ற இரண்டு தொழிலாளர், அவரை காப்பாற்ற கிணற்றில் இறங்கினார்கள். ஆனால் அவர்களையும் விஷாவாயு தாக்கியது.

உடனே இச்சம்பவம் குறித்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த மூன்று பேரை காப்பாற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கினார்கள். வீரர்களும் விஷாவாயு தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த ஐந்து பேரின் உடலையும் கயிறு மூலம் மீட்டனர். இச்சம்பவம் சுமார் 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இதுக்குறித்து போலிஸ் கமிஷனர் பிரதாப் தீவாகர் கூறியது, "கிணற்றில் சல்பர் உள்ளடக்கத்தை கொண்டிருந்த ஒரு ரசாயன மாதிரியை எடுத்துள்ளோம். "பல நாட்களுக்காக கிணறு மூடப்பட்டதால், அதில் ரசாயன வாயு உருவாகி உள்ளது" எனக் கூறினார்.

Trending News