குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகமெகா பேரணி -மம்தா!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிசம்பர் 16 அன்று கொல்கத்தாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மெகா பேரணியை அறிவித்துள்ளார்.

Last Updated : Dec 13, 2019, 02:52 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகமெகா பேரணி -மம்தா! title=

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிசம்பர் 16 அன்று கொல்கத்தாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மெகா பேரணியை அறிவித்துள்ளார்.

மேலும், டிசம்பர் 17 அன்று கொல்கத்தாவின் ஜாதவ்பூரிலிருந்து மாயோ சாலையில் மகாத்மா காந்தி சிலை வரை மற்றொரு பேரணியை நடத்தவும் திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டம், மக்களவையில் திங்கள்கிழமை, ராஜ்யசபாவில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது, இதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை ஜனாதிபதியால் கையெழுத்தானது. குடியுரிமைச் சட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக வடகிழக்கில் மக்களின் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

முன்னதாக, குடியுரிமை (திருத்த) மசோதாவை புதன்கிழமை பாராளுமன்றம் நிறைவேற்றுவதற்கு முன்பே மம்தா பானர்ஜி தனது எதிர்ப்பைக் தெரிவித்திருந்தார். "இந்த மசோதாவுக்கு பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், நாங்கள் இங்கு இருக்கும் வரை யாரும் உங்கள் மீது எதையும் திணிக்க முடியாது" என்று அவர் கரக்பூரில் ஒரு கூட்டத்தில் பேசினார். இதன் மூலம் குடியுரிமை (திருத்த) மசோதா மீதான தனது முதல் எதிர்ப்பினை அவர் பதிவு செய்தார்.

இந்நிலையில் தற்போது குடியுரிமை திருத்த மசோதா சட்டமாக உயிர்பெற்றுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிசம்பர் 16 அன்று கொல்கத்தாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மெகா பேரணியை அறிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 17 அன்று கொல்கத்தாவின் ஜாதவ்பூரிலிருந்து மாயோ சாலையில் மகாத்மா காந்தி சிலை வரை மற்றொரு பேரணியை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, குடியுரிமை திருத்த மசோதாவை இந்தியாவின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக தன்மை மீது நடத்தப்படும் தாக்குதல் என்று கூறி, கேரள முதல்வர் பினராயி விஜயன், இதுபோன்ற "அரசியலமைப்பற்ற" சட்டத்திற்கு தனது மாநிலத்திற்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார். "இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்தியர்களுக்கும் அவர்களின் மதம், சாதி, மொழி, கலாச்சார பாலினம் அல்லது தொழில் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் குடியுரிமை பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. குடியுரிமை (திருத்த) மசோதாவால் இந்த உரிமை ரத்து செய்யப்படுகிறது. குடியுரிமை தீர்மானிக்கும் நடவடிக்கை மதத்தின் அடிப்படை அரசியலமைப்பை நிராகரிப்பதாகும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேப்போல், பஞ்சாப் சட்டசபையில் பெரும்பான்மையுடன் கட்டளையிடும் காங்கிரஸ., "அரசியலமைப்பற்ற" மசோதா மாநிலத்தில் செயல்படுத்தப்படுவதைத் தடுக்கும் என்று அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். "இந்த சட்டம் மிகவும் பிளவுபடுத்தும் தன்மை கொண்டது. நாட்டின் மக்களை மத அடிப்படையில் பிரிக்க முயற்சிக்கும் எந்தவொரு சட்டமும் சட்டவிரோதமானது மற்றும் நெறிமுறையற்றது" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News