Monkeypox in India: கர்நாடகாவில் எச்சரிக்கை நிலை; காரணம் என்ன

Monkeypox in India: கர்நாடகாவின் தட்சிண கன்னடாவில், முரங்கு அம்மை தொடர்பாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 20, 2022, 10:07 AM IST
  • கேரளாவில் மேலும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு.
  • குரங்கு அம்மை பாதித்த இளைஞர் வந்த விமானத்தில் 191 பயணிகள் இருந்தனர்.
  • கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடா மாவட்ட சுகாதாரத் துறை விடுத்துள்ள எச்சரிக்கை.
Monkeypox in India: கர்நாடகாவில் எச்சரிக்கை நிலை; காரணம் என்ன title=

கேரளாவில் மேலும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  அந்த நபர் மங்களூரு சர்வதேச விமான நிலையம் (எம்ஐஏ) வழியாக கேரளாவுக்குச் சென்ற நபர் என்பதால், கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடா மாவட்ட சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை பாதித்த இளைஞர் வந்த விமானத்தில் 191 பயணிகள் இருந்தனர். 31 வயதான நபர் ஜூலை 13 ஆம் தேதி துபாயில் இருந்து மங்களூருக்கு வந்த நிலையில், இப்போது கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று PTI அறிக்கை தெரிவித்துள்ளது.

அவருடன் தொடர்பில் வந்த 35 பேர் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகள் அவருடன் பயணம் செய்த பயணிகளை தனிமைப்படுத்தவும், கண்காணிப்பில் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் பிடிஐயிடம் தெரிவித்தன.

மேலும் படிக்க | கேரளாவில் குரங்கு அம்மை - தடுப்பூசியும் சிகிச்சை முறையும்!

குரங்கு அம்மை பாதித்த இளைஞர் வந்த விமானத்தில் 191 பயணிகள் இருந்த நிலையில், அவர்களில் 15 பேர் தட்சிண கன்னடாவைச் சேர்ந்தவர்கள், 6 பேர் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 13 பேர் காசர்கோட்டைச் சேர்ந்தவர்கள், மேலும் கண்ணூரிலிருந்து வந்த பயணிகள். மங்களூருவில் இருந்து வந்த பயணிகள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அறிகுறிகள் தோன்றினால் சுகாதார துறையை உடனே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி டாக்டர் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், குரங்கு அம்மை காய்ச்சலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைசூரு, சாமராஜநகர், குடகு, மங்களூரு மற்றும் உடுப்பி போன்ற மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

"ஏற்கனவே, மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில், மாநில அரசும் விரவில் வழிகாட்டுதல்களை வெளியிடும்," என்று சுகாதார துறை  அதிகாரி ஒருவர் பி.டி.ஐ-யிடம் தெரிவித்தார். குரங்கு பாக்ஸ் மற்றொரு கோவிட்-19 போன்ற தொற்றுநோயாக இருக்காது என்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களை மட்டுமே பாதிக்கும் என்றும் பிந்தையவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க | Monkeypox in India: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி

கேரள அரசு செவ்வாய்கிழமை ஆலப்புழா என்ஐவியில் குரங்கு நோய் தொற்றுக்கான பரிசோதனையைத் தொடங்கியது, மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ், புனே என்ஐவியில் இருந்து சோதனைக் கருவிகள் கொண்டுவரப்பட்டதாகவும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாதிரிகள் இப்போது ஆலப்புழாவுக்கு அனுப்பப்படுவதாகவும் கூறினார்.

திங்களன்று, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலின் இரண்டாவது  தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தெற்கு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஜூலை 14 அன்று பதிவாகியது. நோயாளி தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க | இந்தியாவில் மங்கி பாக்ஸ்: அறிகுறிகள் என்ன? இதற்கு சிகிச்சை உள்ளதா? விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News