புதுடெல்லி (New Delhi): கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில் நான்கு வயது சிறுமியின் தாய் தைரியமாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஆண்களுடன் சண்டையிட்டு மகளை காப்பாறிய வீடியோ வைரலாகியுள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி (CCTV) கேமராக்களில் பதிவானது. சிறுமியின் 27 வயது சித்தப்பா தான் இந்த சிறுமியை கடத்தி பெற்றோரிடமிருந்து பணம் பறிக்க திட்டமிட்டதாக போலீஸார் கூறினர். கிருஷ்ணா நகரில் வசிக்கும் உபேந்தர், தனது சகோதரியிடமிருந்து ரூ .30 முதல் 35 லட்சம் வரை மிரட்டி பணம் பறிக்கும் பொருட்டு தனது அண்ணன் மகளையே கடத்த திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும், அவரது திட்டம் தோல்வியுற்றது, அவர் புதன்கிழமை கிருஷன் நகரில் கைது செய்யப்பட்டார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ALSO READ | வாழ்விலும் சாவிலும் ஹீரோவான இளைஞர்... மூளை சாவு அடைந்ததால் உடல் உறுப்பு தானம்..!!!
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த சம்பவத்தின் வீடியோவில், கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து அந்த பெண் தனது மகளை இழுப்பதை காணலாம். அதை அடுத்து பைக் தரையில் விழுகிறது.
A mother was able to save her four-year-old daughter from being kidnapped on Tuesday from the clutches of armed kidnappers in Shakarpur area of East. @DelhiPolice pic.twitter.com/1XdJJb3dIU
— Saurabh Trivedi (@saurabh3vedi) July 22, 2020
குற்றம் சாட்டப்பட்டவர் மாலை 4 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வந்து தண்ணீர் கேட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் தாய் தண்ணீர் கொண்டு வர உள்ளே சென்றபோது, அவர்கள் சிறுமியை கடத்த முயன்றனர். இருப்பினும், அந்தப் பெண் அதைப் பார்த்து வெற்றிகரமாக தனது மகளை கடத்தல்காரரிடமிருந்து விடுவித்தாள்.
ALSO READ | தண்டனையைத் தவிர்க்க போலி மரண சான்றிதழ்.. எழுத்து பிழையால் சிக்கிய பரிதாபம்..!!!
இதற்கிடையில், கடத்தல்காரர்களை பிடிக்க அந்தப் பெண்ணின் அண்டை வீட்டாரும் களத்தில் இறங்கினர், அவர்களில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை துரத்த தொடங்கினார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தப்பித்தனர். ஆனால் தங்கள் பைக்குகளை அவசரமாக அந்த இடத்திலேயே விட்டுவிட்டனர்.
பைக்கின் பதிவு எண் போலியானது என்று டெல்லி காவல்துறையினர் கண்டறிந்தனர். ஆனால் அதன் உரிமையாளர் தீராஜை கண்டறிந்து விசாரித்ததில், குழந்தையின் சித்தப்பா, உபேந்திரா தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ஒப்புக்கொண்டார்.
விசாரணையின்போது, தான் கடனில் இருப்பதாகவும், காந்தி நகரில் ஒரு துணிக்கடை வைத்திருக்கும் தனது சகோதரரிடமிருந்து பணம் பறிக்க திட்டமிட்டதாகவும் ஒப்புக் கொண்டார். தப்பியோடிய பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.