மீண்டும் பரவும் ஒமைக்ரான்... கண்காணிப்புகளை தீவிரப்படுத்தும் சுகாதார துறை!

கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளின் சிரமங்களை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் பாதிப்புகள் மக்களை பகாசுரனாய் தொடர்கின்றன.  இதற்கிடையில், ஓமிக்ரானின் புதிய துணை மாறுபாடு EG.5.1.1 வகை மாறுபாடு மே மாதத்தில் மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 10, 2023, 09:39 PM IST
  • EG.5.1.1 துணை மாறுபாடு கண்டறியப்பட்டது தொடர்பாக, சுகாதார குழு கண்காணித்து வருகிறது.
  • மக்கள் கொரோனா விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்ட நோயாளியின் மரணம் குறித்த தகவல் புதன்கிழமை கிடைத்ததாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீண்டும் பரவும் ஒமைக்ரான்...  கண்காணிப்புகளை தீவிரப்படுத்தும் சுகாதார துறை! title=

கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளின் சிரமங்களை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் பாதிப்புகள் மக்களை பகாசுரனாய் தொடர்கின்றன.  இதற்கிடையில், ஓமிக்ரானின் புதிய துணை மாறுபாடு EG.5.1.1 வகை மாறுபாடு மே மாதத்தில் மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரே ஒருவர் தான் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதால் வேண்டியதில்லை என்கின்றனர். எனினும், இதனை பரவாமல் தடுக்க மக்கள் கொரோனா விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. . மகாராஷ்டிராவின் சுகாதார கண்காணிப்பு அதிகாரி பபிதா கம்லாபுர்கர் கூறுகையில், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கோவிட் -19 நெறிமுறையைப் பின் பற்றுவது அவசியம். கொரோனா விதிகளை மக்களை தவறாமல் பின் பற்ற வேண்டும் என்று சுகாதார துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Omicron இன் புதிய துணை மாறுபாடு

மே மாதம் EG.5.1.1 துணை மாறுபாடு கண்டறியப்பட்டது தொடர்பாக, எங்கள் குழு அதை கண்காணித்து வருகிறது என்று சுகாதார அதிகாரி பபிதா கம்லாபுர்கர் கூறினார். இருப்பினும், மே மாதத்தில் ஒரு வழக்கு மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் அவர் கூறினார். ஆனால் பாதிக்கப்பட்ட நோயாளி பற்றிய தகவலை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். அவரது பாலினம், வயது மற்றும் பயண வரலாறு பற்றிய தகவல்களைப் பகிர மறுத்துவிட்டனர்.

எடுக்கப்பட வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள்

எனினும் கொரோனா பரவவல் அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்றும் கம்லாபுர்கர் கூறினார். இது தவிர, மாறுபாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பதற்றம் கொள்ள தேவையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. துணை வகை மாறுபாடுகள் எவ்வாறு பரவுகின்றன, அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து வழக்கமான கண்காணிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் கமலாபுர்கர் கூறினார்.

கோவிட்-19 தொற்று பாதிப்பு எண்ணிக்கை

இதற்கிடையில், மும்பையில் புதன்கிழமை 10 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதன் பின்னர் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,64,108 ஆக அதிகரித்துள்ளது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஒரு நோயாளி மரணம் அடைந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 19,776 ஐ எட்டியது. பாதிக்கப்பட்ட நோயாளியின் மரணம் குறித்த தகவல் புதன்கிழமை கிடைத்ததாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரு மாதத்துக்கும் மேலான இடைவெளியில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவாகும்.

கொரோனா தொற்றுநோயின் பாதிப்புகள் மக்களை பகாசுரனாய் தொடர்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை வைரஸ் பாதொடர்ந்து தாக்குகிறது என்ற செய்தி கவலைகளைத் தருகிறது. புதிய கோவிட்-19 வகை வைரஸ்களால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டு மக்களும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். EG.5 என்ற எரிஸ் வைரஸின் பாதிப்பு, ஜூன் மாதம் நடுப்பகுதியிலிருந்து ஒரே மாதத்தில் சுமார் இருமடங்கானது கவலையளிப்பதாகவும், தற்போது 45 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு WHO தெரிவித்துள்ளது.

சமீபத்திய மாதங்களில், புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகள் கண்டறியப்பட்ட அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் உட்பட உலகின் சில பகுதிகளில் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) தரவுகள், கோவிட் மற்றும் நேர்மறை சோதனை விகிதங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

கோவிட்-19 இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தால் என்ன செய்ய வேண்டும்?  

  • பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
  • தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்
  • சாத்தியமான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள்
  • திரவ உணவுகளை அதிகரிக்கவும்

சுவாசிப்பதில் சிரமம் அல்லது மார்பு வலி போன்ற கடுமையான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். 

மேலும் படிக்க | உருளைக்கிழங்கு ஆரோக்கியமானதா இல்லையா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News