News Tidbits ஆகஸ்ட் 26: இன்றைய சில முக்கியமான செய்திகள்...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 க்கான 8,23,992 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.  நாட்டின் மொத்த கோவிட் சோதனைகளின் எண்ணிக்கை 3.75 கோடி என்ற அளவைத் தாண்டியது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 26, 2020, 10:45 PM IST
  • போக்குவரத்திற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிய நாட்டின் முதல் மாநிலம் கர்நாடகா
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 க்கான 8,23,992 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
News Tidbits ஆகஸ்ட் 26: இன்றைய சில முக்கியமான செய்திகள்... title=

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 க்கான 8,23,992 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.  நாட்டின் மொத்த கோவிட் சோதனைகளின் எண்ணிக்கை 3.75 கோடி என்ற அளவைத் தாண்டியது.  

இந்தியாவில் கோவிட் பரிசோதனைகள் அதிகரித்திருப்பதால் கோவிட் 19-ஐ சிறப்பாக நிர்வகிக்க முடிவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

இந்தியாவில் கோவிட் 19 பாதிக்கப்பட்ட மொத்தம் 24,67,758 பேர் மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 63,173 பேர் குணமடைந்துள்ளனர்.  

மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்திற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிய நாட்டின் முதல் மாநிலம் கர்நாடகா.  

மொபைல் மூலமாக 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு வெளியிடும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது...

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் முக்கிய குற்றவாளி என தேசிய புலனாய்வு முகமை குறிப்பிட்டுள்ளது. 

வர்த்தக, பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகள் தொடர்பான 17 வது இந்தியா-வியட்நாம் கூட்டு ஆணையக் கூட்டம் மெய்நிகர் கூட்டமாக நடைபெற்றது.   

நாட்டில் 5.88 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 8,363 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள் தொடர்பான  நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறுகிறது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் கெனோஷாவில் கறுப்பினத்தை சேர்ந்த  ஜேக்கப் பிளேக் என்பவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது. தாக்கபப்ட்டவர் தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.  'பிளாக் லைவ்ஸ் மேட்டர்'  போராட்டங்களை ஏற்கனவே அமெரிக்கா சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.   

"காட்டு போலியோ" நோய்  ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயிலிருந்து ஆப்பிரிக்கா விடுபட்டுவிட்டதாக, ஆப்பிரிக்கா பிராந்திய சான்றிதழ் ஆணையம் அறிவித்துள்ளது...

Read Also | Thailand: முடியாட்சியை விமர்சிப்பவர்கள் Facebook மூலம் அரசாங்கத்திற்கு கொடுத்த அதிர்ச்சி பதில்...

Trending News