கேரளா தங்க கடத்தலில் தாவூத் இப்ரஹீம் கும்பலின் தொடர்பு உள்ளதா....NIA கூறுவது என்ன..!!!

கேரள தங்கக் கடத்தல் மோசடி வழக்கை தேசிய புலானாய்வு அமைப்பு NIA விசாரணை செய்து வருகிறது

Last Updated : Oct 15, 2020, 11:49 AM IST
  • கேரள தங்கக் கடத்தல் மோசடி வழக்கை தேசிய புலானாய்வு அமைப்பு NIA விசாரணை செய்து வருகிறது
  • டான்சானியா மற்றும் துபாய் ஆகியவை தாவூத் நிறுவனம் செயல்படும் முக்கிய இடங்களாகும்.
  • ஐ.எஸ்.ஐ.எஸ்., மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களை ஆதரிக்கும் போஸ்டர்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.
கேரளா தங்க கடத்தலில் தாவூத் இப்ரஹீம் கும்பலின் தொடர்பு உள்ளதா....NIA கூறுவது என்ன..!!! title=

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு பாதாள உலக டான் தாவூத் இப்ராஹிம் நடத்தும் D-கம்பெனியுடன் தொடர்பு இருப்பதாக  சந்தேக்கிக்கப்படுவதற்கான ஆதாரங்களை தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) வெளியிட்டுள்ளதை அடுத்து, இந்த வழக்கில் இது ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் ஜாமீன் மனுவை எர்ணாகுளத்தில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் பரிசீலித்தபோது இந்த சந்தேகம் எழுப்பட்டது.

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரமீஸ் கே.டி. (Ramees KT) தான்சானியாவிற்கு சென்று, வைர வணிகத்திற்கான உரிமத்தை வாங்க  முயன்றார். பின்னர் அவர் தங்கத்தை, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்தி சென்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தங்கத்தை மீண்டும் கேரளாவுக்கு கொண்டு வந்தார்.

"டான்சானியா மற்றும் துபாய் ஆகியவை தாவூத் நிறுவனம் செயல்படும் முக்கிய இடங்களாகும். தான்சானியாவில்  தாவூத் நிறுவனத்தின் விவகாரங்களை பெரோஸ் ஒயாசிஸ் என்ற தென்னிந்தியரால் கையாளுகின்றார். ரமீஸூக்கு தாவூத்தின் டி-நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாக தாங்கள் சந்தேக்கிப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ள NIA, நவம்பர் 2019 இல் 13 .22 மிமீ துளை துப்பாக்கிகளுடன் பிடிபட்டார் எனவும், தங்கக் கடத்தல் நடந்து கொண்டிருந்தபோது இது நடந்தது "என்று என்ஐஏ வழக்கறிஞர் அர்ஜுன் அம்பலப்பட்டா கூறினார்.

அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட 12வது நபரான முகமது அலி பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர் என்றும், கேரள காவல்துறையை சேர்ந்தவரின் கை வெட்டிய வழக்கில் காவல்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும் என்ஐஏ ஆலோசகர் குறிப்பிட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ்., மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களை ஆதரிக்கும் போஸ்டர்கள் மற்றும் படங்கள்,  பல லட்சங்கள் மதிப்பிலான பரிவர்த்தனைகளின் விவரங்களை சித்தரிக்கும் காகித ஆவணங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.

முகமது அலியின் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள்,  தடயவியல் ஆய்வு தொடர்பான நவீன முறைகளை பயன்பற்றி மீட்டெடுக்கப்படும் எனவும்,  அவரது மொபைல் தொலைபேசியிலிருந்து கூடுதல் தரவுகள் சேகரிக்கப்படும் எனவும், பின்னர் அதை வைத்து நடத்தப்படும் விசாரணையின் மூலம் மேலும் தக்வல்கள் பெற இருப்பதாகவும் NIA நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

ALSO READ | சபரிமலை ஐயப்பன் கோவிலில் அக்டோபர் 16 முதல் 5 நாட்களுக்கு நடை திறப்பு..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News