நீரவ் மோடிக்கு அதிர்ச்சி தந்த நீதிமன்றம்; தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பு

ஊழல் வழக்கில் நாட்டை விட்டு வெளியேறிய வைர தொழிலதிபர் நீரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 5, 2019, 07:04 PM IST
நீரவ் மோடிக்கு அதிர்ச்சி தந்த நீதிமன்றம்; தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பு title=

புதுடெல்லி / மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் (PNB Scam) வழக்கில் நீரவ் மோடிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் வழக்கில் நாட்டை விட்டு வெளியேறிய வைர தொழிலதிபர் நீரவ் மோடியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். சிறப்பு நீதிமன்றம் (ED) நீரவை தப்பியோடிய குற்றவாளியாக அறிவித்துள்ளது. விரைவில் நீரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவுகளும் வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக நேற்று (புதன்கிழமை) நீரவ் உட்பட மூன்று பேருக்கு எதிராக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதுடன், ஜனவரி 15 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால், அவர்கள் தலைமறைவான தேடப்படும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நீரவ் மோடி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்களான நிஷால் மோடி மற்றும் சுபாஷ் பராப் ஆகியோருக்கு எதிராக சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பி, நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட இந்த மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால், அவர்கள் தலைமறைவான குற்றவாளிகள் என அறிவிக்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியது.

குற்றம் சாட்டப்பட்டவர் சட்டப்படி தலைமறைவு குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டால், விசாரணை செய்யும் அமைப்பு, அவரது சொத்தைக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். சிறப்பு நீதிமன்றத்தில், நீரவ் மோடியை தலைமறைவாக அறிவிக்க ED மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், போலி ஆவணங்களின் உதவியுடன் கடன் வாங்குவது குறித்து நிறுவனம் விசாரித்து வருகிறது.

மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் வங்கி பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சட்ட விரோதமாக பண மோசடியில் ஈடுபட்டு தப்பியோடிய நீரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது. 

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெற்ற ரூ.13,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார். லண்டனில் தஞ்சம் அடைந்த அவர், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமின் கேட்டு இதுவரை தொடர்ந்த அனைத்து மனுவையும் லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும் நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இருந்து தப்பிய 51 மோசடி மன்னர்கள் இதுவரை 17 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை கடனாக பெற்றுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  தப்பியோடியவர்கள் பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளது. 

முன்னதாக, இந்திய வங்கிகளிடன் இருந்து சுமார் ரூ. 9000 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இருந்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News