அமைச்சராக இருப்பதால் பெட்ரோல் விலை உயர்வால் நான் பாதிக்கவில்லை :ராம்தாஸ் அத்வாலே

நான் ஒரு அமைச்சராக இருப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நான் பாதிக்கப்படுவதில்லை என ராம்தாஸ் அதாவல்-ன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2018, 10:16 AM IST
அமைச்சராக இருப்பதால் பெட்ரோல் விலை உயர்வால் நான் பாதிக்கவில்லை :ராம்தாஸ் அத்வாலே title=

நான் ஒரு அமைச்சராக இருப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நான் பாதிக்கப்படுவதில்லை என ராம்தாஸ் அதாவல்-ன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...! 

பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

இந்நிலையில், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது., தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால் நான் ஒரு மத்திய மந்திரி, எனக்கு அரசின் சலுகைகள் உள்ளன. அவற்றை நான் பயன்படுத்தி வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி எனக்கு கவலையில்லை. எனது மந்திரி பதவி பறிபோனால்தான் நான் பாதிப்பு அடைவேன் என கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மத்திய மந்திரியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending News