J&K என்கவுண்டர்: பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை....

ஜம்மு-காஷ்மீரில் இன்று பாதுகாப்புபடையினர் தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை....

Last Updated : Oct 24, 2018, 10:37 AM IST
J&K என்கவுண்டர்: பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.... title=

ஜம்மு-காஷ்மீரில் இன்று பாதுகாப்புபடையினர் தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை....

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நவ்காம் மாவட்டம் சூட்டு  பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்ததால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மேலும் அங்கு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

 

 

Trending News