Gandhi Jayanthi: இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் இன்று

அக்டோபர் இரண்டு இந்தியாவுக்கு முக்கியமான தினம். அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் இன்று... முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளும் இன்று தான்..

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 2, 2021, 10:57 AM IST
  • காந்தி ஜெயந்தி இன்று
  • அனைத்துலக வன்முறையற்ற நாள் இன்று
  • முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று
Gandhi Jayanthi: இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் இன்று title=

புதுடெல்லி: தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உணர்வுப் பூர்வமாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி அக்டோபர் இரண்டாம் நாள், "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அறிவிக்கப்பட்டது. அனைத்துலக வன்முறையற்ற நாளை சர்வதேச நாடுகள் அனைத்தும் கடைபிடிக்கின்றன.

காந்தி ஜெயந்தியான இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோதி அண்ணல் காந்தியடிகளின் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.

pm

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளான இன்று பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். மதிப்புகள் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அவரது வாழ்க்கை எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கும் இருக்கும் என்று பிரதமர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காந்தி, தனது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியதில்லை. ஆனால், தலைவர்கள் பலர் வற்புறத்தியதால், ஏழை மக்களின் வாழ்வாதாரமான ராட்டை தினமாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாட அவர் சம்மதித்ததார் என்பது அவருடைய உயர் பண்புக்கு அடையாளம்.

காந்தியடிகள் பூவுடலை விடுத்தபோது, புது தில்லியில் அவர் தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ் காட்டில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also Read | 9 மாவட்டங்களில் மது கடைகளுக்கு விடுமுறை!

இன்று நாடு முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெறும். பள்ளிகளிலும் சமூகத்திலும் அகிம்சை வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு இந்திய விடுதலை இயக்கத்தில் காந்தியின் முயற்சியைக் கொண்டாடும் வகையில் காந்தி விருதுகள் வழங்கப்படுகின்றன.
காந்தியின் மனதிற்கு நெருக்கமான ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் இன்று எல்லா இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும்.  

நாடு முழுவதும் வழக்கமாக காந்தி ஜெயந்தியன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.  வருடத்திற்கு நான்கு முறை ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) மற்றும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் காரணமாக தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கிறது. 

எனவே, உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் மற்றும் இதர மாவட்டங்களின் தேர்தல்கள் நடைபெற உள்ள ஊராட்சிகளையும் தவிர்த்து பிற ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read Also | முதுமலையில் காட்டுப்புலியை வேட்டையாட உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News