முகமுடிகளை உருவாக்கும் பணியில் ஒடிசா சிறைச்சாலை கைதிகள்...

ஒடிசாவின் பாரிபாடா வட்டம் சிறைச்சாலையின் கைதிகள், முதியோர் இல்லங்களில் விநியோகிப்பதற்கான முகமூடிகளை உருவாக்கி கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

Last Updated : Apr 10, 2020, 04:29 PM IST
முகமுடிகளை உருவாக்கும் பணியில் ஒடிசா சிறைச்சாலை கைதிகள்... title=

ஒடிசாவின் பாரிபாடா வட்டம் சிறைச்சாலையின் கைதிகள், முதியோர் இல்லங்களில் விநியோகிப்பதற்கான முகமூடிகளை உருவாக்கி கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

சிறை அதிகாரிகள் கைதிகளுக்கு தையல் முகமூடிகளில் உதவி செய்து வருகின்றனர். சிறைக்குள் எட்டு கைதிகள் முகமூடிகளை தைப்பதில் ஈடுபட்டுள்ளதாக பாரிபாடா வட்ட சிறை கண்காணிப்பாளர் பிரதீப்த குமார் பெஹெரா தெரிவித்தார்.

இந்த முன்முயற்சியில் கைதிகள் தங்குமிடம் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு 700-க்கும் மேற்பட்ட முகமூடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளின் DG-யின் அனுமதியுடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. சிறையில் உள்ள அனைத்து கைதிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடிகளை அணிய வேண்டும். மாவட்ட நிர்வாகத்துக்கும் முகமூடிகளை தைக்க கைதிகள் தயாராக இருப்பதாகவும் பெஹெரா தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள ஒரு கடையில் இருந்து விற்கப்படும் பருத்தியால் செய்யப்பட்ட துணிகளை தைப்பதில் கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இருப்பினும், கடந்த 15 நாட்களாக கடை மூடப்பட்ட நிலையிலும் பயிற்சி பெற்ற கைதிகள் முகமூடி தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News