Odisha Train Accident: கொல்கத்தாவின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் - 12842) இன்று மாலை 3. 20 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்ததாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் மீது மோதியதால்தான் முதலில் விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சிறிது நேரத்தில், பெங்களூருவின் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி செல்லும் மற்றொரு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரமண்டல் ரயிலில் இருந்த மொத்தம் 16 பேட்டிகளில் 800 பேருக்கு அதிகமாகனோர் முன்பதிவு செய்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதில் 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், உயிரிழப்பு எண்ணிக்கை உறுதிசெய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் நாளை காலை ரயில்வே துறை சார்பில் வெளியிடப்படும் என தெரிகிறது.
மேலும் படிக்க | கோரமண்டல் உள்பட 3 ரயில்கள் விபத்து... வெளியான சென்னை பயணிகள் விவரம்!
இந்நிலையில், விபத்தில் சிக்கிய கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பயணி, ஒருவர் விபத்து குறித்து பேசிய வீடியோவை தனியார் தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ளார். கொல்கத்தாவில் இருக்கும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த அவர் கூறுகையில்,"பாலேஸ்வர் ரயில் நிலையத்திற்கு மாலை 6.15 மணிக்கு கோரமண்டல் ரயில் வந்தது. அங்கிருந்த உடனே புறப்பட்ட அது ரயில், சுமார் 15 நிமிடத்தில் சென்றவுடன் எதிரே வந்த சரக்கு ரயிலுடனும், துரந்தோ (ஹவுரா) ரயிலுடனும் விபத்தில் சிக்கியது.
Latest visuals from the train accident site in Balasore, Odisha. pic.twitter.com/XZErVBU0Me
— Press Trust of India (@PTI_News) June 2, 2023
நான் B7 பெட்டியில் இருந்தேன். B6 பெட்டி வரையில் தடம் புரண்டு விபத்தானது. இரண்டு முன்பதவில்லாத பொதுப்பெட்டிகள் முழுவதுமாக தடம் புரண்டன. அதில், பல பேர் படுகாயமடைந்துள்ளனர். விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெறுகிறது. இது முழுமையாக நிறைவு பெற இரண்டு நாளாகும்" என தெரிவித்தார். இதனால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
துரித கதியில் மீட்புப்பணி
மீட்பு பணிகள் ஒருபுறம் இருக்க, விபத்து நடந்துள்ள அந்த வழித்தடத்தை சீரமைக்க முழு வீச்சாக ரயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாக முக்கிய மாநிலங்களை இணைக்க கூடிய வழித்தடமாக தற்போது விபத்து நடந்திருக்க கூடிய இந்த வழித்தடம் இருக்கிறது. எனவே மீட்பு பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு விபத்துக்குள்ளான ரயில்வே பட்டியல் அப்புறப்படுத்தப்பட்டு இந்த விபத்தால் சேதம் அடைந்த ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட துரிதமாக ரயில்வே துறை பணி மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | கோரமண்டல் ரயில் விபத்து நடந்தது எப்படி...? மற்றொரு ரயிலும் தடம் புரண்டது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ