திடீரென்று சோனியாவை சந்திப்பு 3 மத்திய அமைச்சர்கள் - ஒத்துழைப்பு தர கோரிக்கை

இன்று டெல்லியில் பாஜகவின் மூத்த அமைச்சர்கள் காங்கிரஸ் முன்னால் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசி உள்ளானர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 7, 2019, 04:08 PM IST
திடீரென்று சோனியாவை சந்திப்பு 3 மத்திய அமைச்சர்கள் - ஒத்துழைப்பு தர கோரிக்கை  title=

புது டெல்லி: இன்று டெல்லியில் பாஜகவின் மூத்த அமைச்சர்கள் காங்கிரஸ் முன்னால் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசி உள்ளானர். 

543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் தமிழகத்தின் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 11 துவங்கி மே 19 வரை ஏழு கட்டங்களா நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்ப்பட்டது. எண்ணிகை  

542 மக்களவைக்கான தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற போதிலிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்தோடு மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 30 ஆம் தேதி மோதி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சரவையின் 17வது மக்களவை வரும் 17 ஆம் தேதி மக்களவை கூடுகிறது. மக்களவையின் தற்காலிக தலைவராக மேனகா காந்தி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் புதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 542 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 

அதேபோல மாநிலங்களவை கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி நடக்க உள்ளது. அன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற இருக்கிறார். பின்னர் அடுத்த மாதம் 4 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், அடுத்த நாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இந்தநிலையில், மக்களவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற, அதற்ககான ஒத்துழைப்பு வேண்டும் என்று, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, இன்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இணையமைச்சர் அர்ஜுன் ராம், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் என மூன்று மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள்.

அதுமட்டுமில்லாமல், ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத் மற்றும் தி.மு.க. உருபுனர் உறுப்பினர் டி.ஆர் பாலுவையும் சந்தித்து பேசினார்கள்.

Trending News