பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு தமிழக அரசு தான் காரணம் - பிரதமர் மோடி விமர்சனம்

தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்காததால் அம்மாநில மக்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எனும் சுமைக்கு ஆளாவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Apr 27, 2022, 05:44 PM IST
  • மத்திய அரசின் வார்த்தைகளை சில மாநில அரசுகள் கேட்கவில்லை
  • வாட் வரியை குறைக்காததால் மக்களுக்கு சுமை ஏற்படுகிறது
  • தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு தமிழக அரசு தான் காரணம் - பிரதமர் மோடி விமர்சனம் title=

 

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையானது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நாள்தோறும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக இரண்டு வார இடைவெளியில் 15 ரூபாய் அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. 

இதனிடையே கடந்த 20 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் பெரிய மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. முன்னதாக ஜெட் வேகத்தில் உயர்ந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு  தான் காரணம் என பொதுமக்கள் குறை கூறி வந்தனர். ஆனால், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் மாநில அரசுகள் தான் என பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள பாஜகவினர் குற்றம்சாட்டினர். ஏனெனில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி எனும் மதிப்புக்கூட்டு வரியை மாநில அரசுகள் குறைக்க மறுப்பதாக காரணங்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்நிலையில், இதே குற்றச்சாட்டை மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியும் முன்வைத்துள்ளார். கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இதில் கொரோனா தொற்று, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | நாளை பெட்ரோல் விலை என்ன ஆகுமோ! கலக்கத்தில் மக்கள்

Modi

அப்போது பேசிய பிரதமர் மோடி, பொதுமக்களின் சுமையை குறைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்ததை சுட்டிக்காட்டினார். இதேபோன்று மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரிகளை குறைத்து அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறிய அவர் பல்வேறு மாநிலங்கள் வரிகளை குறைத்தபோதும் சில மாநிலங்கள் வரியை குறைக்காததால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். 

எனவே, மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி இன்றைய கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

குறிப்பாக தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல் அடம் பிடிப்பதாகவும் இதனால் அம்மாநில மக்களுக்கு அதிக சுமை ஏற்படுகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News