இன்று நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

Narendra Modi Speech in Parliament: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளிக்கும் உரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை குறித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 5, 2024, 11:29 AM IST
இன்று நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி title=

PM Modi Speech in Lok Sabha: இன்று (பிப்ரவரி 5, திங்கள்கிழமை) மாலை 5 மணியளவில் நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தவுள்ளார். 

நாடாளுமன்றத்தில் ஜனவரி 31 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார். அப்பொழுது "வரும் மக்களவை தேர்தல் 2024-ஐ மனதில் வைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை குறித்த பேசுவார் எனத் தகவல். இது தவிர, பிரதமர் மோடி தனது பதில் உரையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுப்பார் எனவும்' எதிர் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதால், அனைத்து பாஜக எம்.பி.க்களும் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மக்களவையின் நிகழ்ச்சி நிரல் என்னவாக இருக்கும்?

இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தப்படி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பொதுத் தேர்வுகள் தொடர்பான முக்கியமான மசோதா மக்களவையில் தாக்கல் செய்வார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜம்மு-காஷ்மீர் இடைக்கால பட்ஜெட்டை அவையில் தாக்கல் செய்வார். 

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் மத்திய அமைச்சர் அஜய் பட் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பார்கள். 

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9 ஆம் தேதி நிறைவடைகிறது.

மேலும் படிக்க - Video: பாரத் மாதா கீ ஜே... கேரள பெண்ணின் செயல் - டென்ஷன் ஆன மத்திய அமைச்சர்!

மக்களவையில் விவாதம் 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் 12 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. 

கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) பாஜக பெண் எம்பி ஹினா காவிட், விவாதத்தை தொடங்கி வைத்து, மத்திய அரசின் சாதனைகளை முன் வைத்தார். 

அப்பொழுது லோக்சபாவில் மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் பேசும்போது, ​​அரசின் சாதனைகளை விவரித்து எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார். 

எதிர்க்கட்சிகள் சார்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் கௌரவ் கோகோய், திமுகவின் டிஆர் பாலு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசு மீது கடும் விமர்சனத்தையும் வைத்தனர்.

மேலும் படிக்க - பட்ஜெட் உரையில் மிடிள் கிளாசுக்கு சூசகமாக குட் நியூஸ் சொன்ன நிதி அமைச்சர்: நோட் பண்ணீங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News