மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்ப்பு

மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்க உள்ளார் என தகவல்.

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Nov 9, 2018, 04:28 PM IST
மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்ப்பு

மாலத்தீவில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலி வெற்றி பெற்றார். இதனையடுத்து மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி வரும் நவம்பர் 17 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவு புதிய அதிபரின் அழைப்பை ஏற்று, அங்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி அங்கு செல்ல இருப்பதால், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மீண்டும் புதுப்பிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. 

அதற்க்கு முன்னதாக கிழக்காசியா உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக வரும் நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி. மாநாட்டை முடித்துக்கொண்டு அங்கிருந்து மாலத்தீவு செல்கிறார் என தகவல்கள் கிடைத்துள்ளது.