மக்கள் நலனில் அக்கரை இல்லாத காங்கிரஸ்... மோடி சாடல்!

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 2) குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்ததற்காக காங்கிரஸை சாடியுள்ளார். மேலும் துமகூருவில் உள்ள ஸ்ரீ சித்தகங்க மடத்தில் பேசும் போது காங்கிரஸ் அரசியலமைப்பை எதிர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 2, 2020, 05:39 PM IST
மக்கள் நலனில் அக்கரை இல்லாத காங்கிரஸ்... மோடி சாடல்! title=

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 2) குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்ததற்காக காங்கிரஸை சாடியுள்ளார். மேலும் துமகூருவில் உள்ள ஸ்ரீ சித்தகங்க மடத்தில் பேசும் போது காங்கிரஸ் அரசியலமைப்பை எதிர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் துமகூரு சென்றுள்ள மோடி மக்களிடையே பேசுகையில் தெரிவித்ததாவது., "எங்கள் அரசாங்கம் குடியுரிமை திருச்ச சட்டத்தை கொண்டுவந்தது, ஆனால் காங்கிரஸ் அதை எதிர்கிறது. இதாவது அரசியலமைப்பிற்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தங்கள் போராட்டத்தின் மூலம் பாக்கிஸ்தானில் இருந்து துன்புறுத்தப்பட்ட மக்கள் இந்தியாவில் நுழைவதை அவர்கள் எதிர்க்கின்றனர். சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் பாகிஸ்தானில் அதிகரித்து வருகின்றன பாக்கிஸ்தானியர்கள் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மீது அநீதிகளை கட்டவிழ்த்துவிடுகின்றனர். ஆனால் காங்கிரஸ் இதுதொடர்பாக குரல் எழுப்பவில்லை, மாறாக மத்திய அரசின் சட்ட திருத்தத்தில் தான் குறியாக இருக்கின்றனர்" என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்., "பாகிஸ்தானில் மத துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் பாகிஸ்தானைக் கைப்பற்ற விரும்பவில்லை. என்றாலும் அவர்கள் அங்கே அநீதிகளுக்கு ஆளாகின்றனர். பாகிஸ்தானிலிருந்து தப்பிச் வந்தவர்களுக்கு ஆதரவாக நிற்பது நமது கடமை. அவர்களுக்கு உதவ நாம் நம்மாள் முடிந்தவற்றை செய்யவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

அவர்களை பொறுத்தவரை, "மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது, மத சிறுபான்மையினர் அங்கு துன்புறுத்தப்படுகிறார்கள், எனவே அவர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக பேசவில்லை, அதற்கு பதிலாக அவர்கள் இந்த அகதிகளுக்கு எதிராக பேரணிகளை நடத்துகின்றனர்" எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர்., "இன்று இந்திய நாடாளுமன்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், சர்வதேச மட்டத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டியது அவசியம் என்று நான் கூற விரும்புகிறேன். நீங்கள் கிளர்ச்சி செய்ய வேண்டுமானால், கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புங்கள்." எனவும் வலியுறுத்தினார்.

ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார் சுவாமிஜியின் நினைவு அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒரு தகடு ஒன்றை வெளியிட்ட பிரதமர், "இந்த புனிதமான நிலத்திலிருந்து 2020-ஆம் ஆண்டைத் தொடங்குவதில் நான் பெருமைகொள்கிறேன். அதிர்ஷ்டம் பெற்றவனாய் உணர்கிறேன், இந்த புனிதமான ஆற்றலை நான் விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Trending News