உக்ரைன் அமைதி முயற்சிகளில் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது: பிரதமர் மோடி

உக்ரைன் மீதான தாக்குதல் விரைவில் நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2022, 09:20 PM IST
  • பிரதம மந்திரி அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கை.
  • அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது.
  • லாவ்ரோவ் சீனாவுக்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு புது தில்லி வந்தடைந்தார்
உக்ரைன் அமைதி முயற்சிகளில் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது: பிரதமர் மோடி title=

புதுடெல்லி: உக்ரைன் மீதான தாக்குதல் விரைவில் நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தார். மேலும் அமைதி முயற்சிகளுக்கு பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.  இந்தியாவிற்கு வந்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் உடனான சந்திப்பின் போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 உக்ரைனில் உள்ள நிலைமை, மாஸ்கோ மற்றும் கிவ் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் உட்பட,  பல விஷயங்கள் குறித்து,  ரஷ்ய வெளியுறவு அமைச்சர்  பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாக பிரதம மந்திரி அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்திய பிறகு லாவ்ரோவ் பிரதமரை சந்தித்தார். "வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், உக்ரைனில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் விளக்கினார்" என்று PMO அறிக்கை கூறியது.

"வன்முறையை முன்கூட்டியே நிறுத்துவதற்கான தனது அழைப்பை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது" என்று பிரதமர் அலுவலக அறிக்கை கூறியது. 

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் மோடியிடம் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் எடுத்துரைத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன் மாலை, லாவ்ரோவ் சீனாவுக்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு புது தில்லி வந்தடைந்தார்.  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து இந்தியா விமர்சனம் ஏதும் செய்யவில்லை என்பதோடு, ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐநாவில் நடந்த வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தது.

மேலும் படிக்க | தீவிரவாதத்தை பரப்புவதாக புகார்; பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு ரஷ்யாவில் தடை !

இருப்பினும், கடந்த வியாழன் அன்று, உக்ரேனில் மனிதாபிமான நெருக்கடி குறித்து ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திலும் இந்தியா வாக்களிக்கவில்லை. இந்த மோதலில், இந்தியா யாரையும் வெளிப்படையாக ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யாமல், நடுநிலையான நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாகக் கருதப்பட்டது.

உக்ரைன் விஷயத்தில் இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடியை தீர்க்க இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. பிப்ரவரி 24, மார்ச் 2 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி இரண்டு முறை பேசினார். கடந்த வாரம், ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில், உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு "உறுதியாகவும் நிலையானதாகவும்" இருப்பதாகவும், தாக்குதல்களை உடனடியாக நிறுத்த முயல்வதாகவும் கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News