Digital Health ID Card: இப்போது ஒவ்வொரு இந்தியருக்கும், ஆதார் கார்டைப் போல டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்டு இருக்கும், இதன் மூலம் உங்கள் மருத்துவ வரலாறு அனைத்தையும் ஒரே கிளிக்கில் பெறலாம்.
டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்டில், சம்பந்தப்பட்ட நபரின் மருத்துவ வரலாற்றின் தரவுகள் இருக்கும். அதன் பிறகு நோயாளிகள் ஆலொசனைக்கு செல்லும் போது மருத்துவ வரலாறு ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை.
ஆதார் கார்டைப் போலவே, நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்ட் இருக்கும். இந்த ஐடியில், சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து மருத்துவ வரலாற்றின் தரவும் இருக்கும். அதன் பிறகு நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லும்போது மீண்டும் மீண்டும் தங்கள் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் மருத்துவ வரலாறு ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. இதுபற்றி தகவல் அளித்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பிரதமர் நரேந்திர மோடி பிரதமரின் டிஜிட்டல் ஹெல்த் மிஷன் (PM-DHM) திட்டத்தை செப்டம்பர் 27 அன்று தொடங்குவார் என்று கூறினார்.
இந்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி ஏழு இலக்கங்களைக் கொண்டிருக்கும். மருத்துவரிடம் செல்லும் போது, நோயாளி இந்த அடையாள எண்ணை அவரிடம் சொல்ல வேண்டும். மருத்துவர் உங்கள் கணினியில் உங்கள் ஐடியை நுழைத்தவுடன், உங்கள் மருத்துவ வரலாறு அனைத்தும் அவர் பெறலாம். மேலும், இந்த ஐடியை செயல்படுத்த, உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் கார்டுடன் லிங்க் செய்வது கட்டாயமாகும். இந்த திட்டத்தின் பெயர் தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் (The National Digital Health Mission).
இந்த டிஜிட்டல் ஹெல்த் ஐடியில், நோயாளியின் பெயர், முகவரி, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள், சோதனை அறிக்கை, மருந்து, சேர்க்கை, டிஸ்சார்ஜ் மற்றும் மருத்துவர் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். நோயாளியின் முழுமையான மருத்துவ வரலாற்றை ஹெல்த் ஐடி மூலம் அறியலாம்.
PM-DHM என்ற முன்னோடி திட்டத்தின் பரிசோதனை நடவடிக்கையை மத்திய அரசு முடித்துவிட்டது. இந்த திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார், லடாக், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியில் சோதனை செய்யப்பட்டது.
PM-DHM திட்டத்தின் கீழ் மூன்று தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் சுகாதார ஐடி, மருத்துவர்களின் பதிவு மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பான பதிவு ஆகியவை அடங்கும்.