இந்திய அரசுக்கு உதவிய மோசடி செய்து தப்பியோடிய நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி

பி.என்.பி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவரும், தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியின் சகோதரியுமான பூர்வி மோடி சுமார் 17.25 கோடி ரூபாய் இந்திய அரசின் கைக்கு வர உதவி உள்ளார். இதனால் அவர் கிரிமினல் நடவடிக்கையிலிருந்து விலக்கு பெற்றார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2021, 08:58 PM IST
இந்திய அரசுக்கு உதவிய மோசடி செய்து தப்பியோடிய நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி title=

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி (PNB Scam) வழக்கில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், தற்போது தப்பியோடிய தொழிலதிபர்கள் பெரும் சிக்கலை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளதால், சிறைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக, இப்போது அவர்கள் மோசடி மூலம் பெற்ற பணத்தை திருப்பி செலுத்துகிறார்கள்.

சகோதரியின் வங்கிக்கணக்கை நீரவ் மோடி திறந்தார்:
பி.என்.பி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவரும், தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியின் சகோதரியுமான பூர்வி மோடி சுமார் 17.25 கோடி ரூபாய் இந்திய அரசின் கைக்கு வர உதவி உள்ளார். அமலாக்க இயக்குநரகம் (ED) அறிக்கையின்படி, இந்த பணம் இங்கிலாந்து வங்கிக் கணக்கில் இருந்தது. கடன் மோசடி வழக்கில் இந்திய அரசுக்கு உதவி செய்ததற்கு ஈடாக அவரை குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்க அமலாக்கத்துறை அனுமதித்தது. 

ஜூன் 24 அன்று பூர்வி மோடி அமலாக்கத்துறையை அணுகியதாக ED தெரிவித்துள்ளது. லண்டனில் தனது பெயரில் இயங்கும் ஒரு வங்கிக் கணக்கு உள்ளதாக பூர்வி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். பூர்வியின் கூற்றுப்படி, இந்த வங்கிக் கணக்கு அவரது சகோதரர் நீரவ் மோடியின் உத்தரவின் பேரில் திறக்கப்பட்டது. இந்த வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் தன்னுடையது அல்ல என்றும் பூர்வி கூறினார்.

குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விலக்கு: 
அவர் குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விலக்கு அளித்தால், இந்த பணத்தை அமலாக்கத்துறைக்கு அனுப்பப்படும் என்று பூர்வி மோடி கூறினார். கிரிமினல் நடவடிக்கையிலிருந்து விலக்கு பெற்ற பிறகு, இங்கிலாந்து வங்கிக் கணக்கிலிருந்து 23 லட்சம் 16 ஆயிரம் 889.03 அமெரிக்க டாலர்களை இந்திய அரசின் வங்கி கணக்கிற்கு அமலாக்க இயக்குநரகத்திற்கு பூர்வி மோடி செலுத்தினார். 

நீரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி கிளையிலிருந்து சுமார் இரண்டு பில்லியன் டாலர் கடனை பெற்று மோசடி செய்த நீரவ் மோடி மற்றும் அவரது தாய்மாமன் மெஹுல் சோக்ஸியும் நாட்டை விட்டு ஓடிவிட்டனர். மெஹுல் சோக்ஸி தற்போது டொமினிகாவில் சிறையில் உள்ளார். அதே நேரத்தில், நீரவ் மோடி தற்போது இங்கிலாந்து சிறையில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு ஒகொண்டு வருவதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News